முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நடிகர் பிரபுதேவாவுக்கு உடல் நலக்குறைவு! நிகழ்ச்சி ரத்தால் வெயிலில் வாடிய குழந்தைகள்.. கொந்தளித்த பொதுமக்கள்!

03:14 PM May 02, 2024 IST | Mari Thangam
Advertisement

நடனமாடும் உலக சாதனை நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்துகொள்ளாத நிலையில், சிறுவர், சிறுமிகளை வெயிலில் நீண்ட நேரம் நிற்க வைத்ததாக கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் பெற்றோர்கள் வாக்குவாதத்தில் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

பிரபுதேவாவின் 100 பாடல்களுக்கு100 நிமிடங்கள் நடனம் என்ற உலக சாதனையை செய்ய நினைத்து, அதற்கான நிகழ்ச்சியை இன்று சென்னையில் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியை ராபர்ட் மாஸ்டர் அவரது குழுவினருன் சேர்ந்து ஒருங்கிணைத்திருக்கிறார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிரபுதேவா கலந்து கொள்வதாக இருந்தது. இதனால், அவரைப் பார்ப்பதற்காக பல ஊர்களில் இருந்தும் ரசிகர்கள் குவிந்துள்ளனர்.

ஆனால், கடைசி நேரத்தில் உடல்நிலை சரியில்லாததால், நிகழ்ச்சியில் பிரபுதேவா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இதனால் மாணவ மாணவிகளை நீண்ட நேரம் நிற்க வைத்ததால் பெற்றோர்கள் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ரசிகர்களும், பொதுமக்களும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களும் கடும்அதிருப்தி அடைந்தனர். மேலும், நிகழ்ச்சிக்கு வந்திருந்த குழந்தைகள் பல மணிநேரம் வெயிலில் காக்க வைக்கப்பட்டதால் சிலர் மயங்கி விழுந்தனர். குழந்தைங்களுக்கு ஏதாச்சு ஆச்சுனா மாஸ்டர் வந்து பார்ப்பாரா?” என்று பிரபு தேவா வருகைக்காக காத்திருந்த பெற்றோர் கொந்தளித்தனர்.

இந்த நிலையில் உலக சாதனை முயற்சி கைவிடப்பட்டு வெறும் அர்ப்பணிப்பு நிகழ்ச்சியாக மாற்றம் செய்யப்பட்டு நடந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பிரபுதேவா கூறுகையில் ’இந்த நிகழ்ச்சியில் நேரில் பங்கேற்க முடியாதது  வருத்தம் அளிக்கிறது என்றும் மீண்டும் இதே போன்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்தால் தவறாமல் கலந்து கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார்

Tags :
#chennaiPrabhudeva dance performance
Advertisement
Next Article