"என்னைப் பார்த்து பிச்சைக்காரர் செய்த காரியம் என்னால் மறக்கவே முடியாது"; பிரபுதேவா பகிர்ந்த தகவல்..
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் போன்ற பெருமைகளை கொண்டவர் தான் பிரபுதேவா. தமிழ் சினிமாவில் நடன அமைப்பாளர், ஹீரோ, மற்றும் இயக்குநர் போன்ற பல திறமைகளை கொண்டவர் தான் இவர். இவர் தமிழில் மட்டும் இல்லாமல், பாலிவுட்டிலும் வெற்றிகரமான இயக்குநராக வலம் வந்தார். மின்சாரக் கனவு திரைப்படத்தில் இடம்பெற்ற "வெண்ணிலவே வெண்ணிலவே" பாடலுக்கு நடனம் அமைத்ததன் மூலம், இவர் சிறந்த நடன ஆசிரியருக்கான இந்திய தேசிய திரைப்பட விருதைப் பெற்றார்.
பிரபுதேவா பின்னணி நடன கலைஞராக அக்னி நட்சத்திரம் போன்ற திரைப்படங்களில் ஆடியிருந்தாலும், முரளி நடித்த இதயம் திரைப்படத்தின் ஏப்ரல் மேயிலே பாடலிலேயே முதன்மை நடன கலைஞராக அறிமுகமானார். இந்த பாடல் நல்ல புகழ்பெற்றாலும் அதன்பின்னர் ஜெண்டில்மேன் திரைப்படத்தில் இவரது சிறந்த நடனம் இவரை முன்னுக்கு அனுப்பியது. அப்படத்தின் சிக்குப் புக்கு சிக்குப் புக்கு ரயிலே பாடலிற்கு இவர் ஆடிய நடனம் இளைஞர்களை பெரிதும் கவர்ந்தது. இதை அடுத்து ஷங்கரின் இயக்கத்தில் உருவான காதலன் திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்தார். இது தமிழில் மட்டும் அன்றி பிறமொழிகளில் வெளியான இதன் மொழிபெயர்ப்புகளும் வெற்றியடைந்தன.
தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். ஆனால் எந்த படங்களும் பெரிதாக வெற்றி பெறவில்லை. இந்நிலையில் இவர் சமீபத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் கூறும் போது, "மும்பையில் எனது நண்பர் ஒருவருடன் நான் காரில் சென்றுகொண்டிருந்தேன். அப்போது என்னிடம் பிச்சைக் கேட்க வந்த பிச்சைக்காரர் ஒருவர், என்னை அடையாளம் கண்டுவிட்டர். உடனே அவர் தான் கையில் வைத்திருந்த எல்லா பொருட்களையும் கீழே போட்டுவிட்டு, சற்றும் யோசிக்காமல் நடனமாட ஆரம்பித்துவிட்டார். எப்போதும் என்னால் இந்த சம்பவத்தை மறக்கவே முடியாது" எனக் கூறியுள்ளார்.