சக்திவாய்ந்த சூரியப் புயல்..!! உலகமே இருளில் மூழ்கப்போகுது..!! 2025இல் காத்திருக்கும் மிகப்பெரிய ஆபத்து..!! வெளியான பரபரப்பு தகவல்கள்..!!
2024ஆம் ஆண்டின் இறுதியிலேயே 2025ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் வைரலாக தொடங்கிவிட்டன. அந்த வகையில், இந்தாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் பெரும் மோதல் வெடிக்கும் என்றும் உலக நாடுகளின் பொருளாதார கடுமையாக பாதிக்கப்படும் என்றும் கணித்துள்ளார். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான அவரது சில கணிப்புகள் பெரும் கவனத்தை பெற்றுள்ளன.
அதாவது, இந்தாண்டில் மருத்துவ உலகில் புதிய புரட்சி ஏற்படும் என்றும் ஆய்வுக் கூடங்களில் இதயம், கல்லீரல், கிட்னி, கை, கால்கள் போன்ற உடல் உறுப்புகள் தனியாக உருவாக்கப்படும் என்று கணித்துள்ளார். இது மனித குலத்திற்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல், இந்தாண்டில் சக்தி வாய்ந்த சூரியப் புயல் வீசும் என்றும் இதனால் மின்சார சேவை, இணைய சேவை, தொலைத் தொடர்பு சேவை உள்ளிட்டவை பாதிக்கப்படும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். மேலும், உலகமே இருளில் மூழ்கும் ஆபத்து ஏற்படுமாம்.
அமெரிக்காவில் ஒருநாள் மின்சாரம் தடைப்பட்டால் 11 பில்லியன் டாலர் இழப்பு ஏற்படுமாம். கடந்த 2023ஆம் ஆண்டு பாபா வங்கா சூரியப் புயல் குறித்து கணித்திருந்தார். ஆனால், அப்போது சிறிய அளவில் சூரியப்புயல் தாக்கியது. கடந்த 2024ஆம் ஆண்டும் சூரியப் புயல் குறித்து கணித்திருந்தார். அப்போதும் பெரிய அளவில் சூரியப் புயல் தாக்கவில்லை. இந்நிலையில் 2025இல் சக்தி வாய்ந்த சூரியப் புயல் வீசும் என்றும் அதனால் உலகமே முடங்கும் என்றும் கணித்துள்ளார். அப்படி, சூரியப்புயல் வீசி உலகம் முடங்கினால், உலக நாடுகளின் வணிகம் தடைப்பட்டு பொருளாதாரமும் முடங்கும் என்பதில் சந்தேகமில்லை.
அதுமட்டுமின்றி இந்த 2025 ஆம் ஆண்டில் மனிதர்கள் மனதில் நினைப்பதை அறியும் வகையில் அறிவியல் வளர்ச்சி பெறுமாம். இந்த 2025இல் ஏலியன்கள் நிச்சயம் பூமியை தொடர்பு கொள்வார்கள் என்று கணித்துள்ளாராம்.