சக்திவாய்ந்த நிலநடுக்கம்!. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு!. சுனாமி எச்சரிக்கை!. அச்சத்தில் மக்கள்!
Earthquake: அமெரிக்காவின் வடக்கு கலிபோர்னியா கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7 ஆக பதிவானதையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஃபெர்ண்டல் நகருக்கு மேற்கே, 63 கி.மீ. தொலை நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேசிய சுனாமி மையம், அமெரிக்காவின் மேற்கு கடற்கரையின் டூன்ஸ் சிட்டி, ஓரிகான், தெற்கே சான் பிரான்சிஸ்கோ மற்றும் 643 கி.மீ தொலைவில் உள்ள கலிபோர்னியாவின் சான் ஜோஸ் வரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது. கலிபோர்னியாவின் கடலோர பகுதியான கேப் மெண்டொசினா பகுதியில் இந்த நிலநடுக்கம் கடுமையாக உணரப்பட்டது. கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இருப்பினும், சிறிது நேரத்தில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டது.
முன்னதாக நிலநடுக்கத்தால் வீடுகளில் இருந்த பொருட்கள் அதிர்ந்தன. இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து பல இடங்கள் இருளில் மூழ்கின. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். சுனாமி எச்சரிக்கை விடப்பட்டதும் கடலோர பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் இருந்தும் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். அதேபோல, பலரும் உயரமான கட்டிடங்கள் மீது ஏறிக்கொண்டனர். நிலநடுக்கத்தால் சேதம் எதுவும் ஏற்பட்டதா என்பது குறித்து தற்போது வரை தகவல் எதுவும் இல்லை.
Readmore: மாரடைப்புக்கு மிகப்பெரிய காரணம்!. இந்த எண்ணெய்யை பயன்படுத்துவதை நிறுத்துங்கள்!.