பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! அலறியடித்து ஓடிய மக்கள்..!! சுனாமி எச்சரிக்கையா..?
இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கம் என்பது அவ்வப்போது ஏற்பட்டு வருகிறது. அதிர்ஷ்டவசமாக பல நிலநடுக்கங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவது இல்லை. இந்நிலையில் தான் நேற்று பிலிப்பைன்ஸ் நாட்டில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில், அங்குள்ள மக்கள் பெரும் அச்சமடைந்தனர்.
அதாவது பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் மண்டனொ தீவு அமைந்துள்ளது. இந்த தீவை மையமாக கொண்டு 78 கிலோமீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிலிப்பைன்ஸ் நாட்டின் நேரப்படி மாலை 4.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் தொழிற்சாலைகளின் சுவர்கள் இடிந்து விழுந்தன. வணிக வளாகங்களின் மேற்கூரைகள் இடிந்தன. பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டன.
இதனால் பொதுமக்கள் அலறியடித்தபடி வெளியேறி பொதுவெளியில் தஞ்சமடைந்தனர். இருப்பினும் ஜெனரல் சாண்டோஸ் சிட்டி அருகே மரத்தொழிற்சாலை அருகே சுவர் இடிந்து விழுந்ததில் தம்பதி உடல் நசுங்கி பலியாகினர். இதனை போலீசார் உறுதி செய்துள்ளனர். இந்த நிலநடுக்கம் என்பது ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்ம் 2 முதல் 3 வினாடிகள் வரை உணரப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை பொறுத்தவரை நிலநடுக்கம் என்பது ஒன்றும் புதிது அல்ல இங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இருப்பினும் இந்த நிலநடுக்கம் என்பது சக்திவாய்ந்ததாக இருந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும், அதிர்ஷ்டவசமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.