முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

Power Tiller | பவர் டில்லர்களுக்கான மானியத்தொகை ரூ.1.20 லட்சமாக உயர்வு..!! சட்டப்பேரவையில் அமைச்சர் அறிவிப்பு..!!

11:25 AM Feb 20, 2024 IST | 1newsnationuser6
Advertisement

தமிழ்நாட்டில் 2024-25ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேரவையில் இன்று (பிப். 20) தாக்கல் செய்தார். அதில் விவசாயிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார்.

Advertisement

பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகள் :

* நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஒருங்கிணைந்த தென்னை வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ.36.15 கோடி நிதி ஒதுக்கீடு.

* ஏற்றுமதிக்கு உகந்த மா இரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க ரூ.27.48 கோடி ஒதுக்கீடு.

* ஏற்றுமதிக்கு உகந்த வாழை உற்பத்தி செய்ய ரூ.12.73 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிய பலா இரகங்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.1.14 கோடி நிதி ஒதுக்கீடு.

* சர்வதேச தோட்டக்கலை பண்ணை இயந்திரக் கண்காட்சி இவ்வாண்டு நடத்திட ரூ. 10 கோடி நிதி ஒதுக்கீடு.

* தானியங்கி நீர்ப்பாசன அமைப்புகள் விவசாய நிலங்களில் அமைக்க மானியமும், அரசு தோட்டக்கலை பண்ணைகளில் செயல் விளக்கத் திடல்கள் அமைக்கவும் ரூ.27.50 கோடி நிதி ஒதுக்கீடு.

* வரும் நிதியாண்டில் ரூ.16,500 கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* ஆடு, மாடு, மீன் வளர்ப்போருக்கு கடன் வழங்க ரூ.200 கோடி ஒதுக்கீடு.

* கன்னியாகுமரியில் சூரிய தோட்டம், செங்கல்பட்டில் செம்பருத்தி நடவுச் செடிகள் உற்பத்தி மையம் அமைக்கப்படும்.

* தானியங்கி மின்னனு நீர்ப்பாசன அமைப்புகள் அமைக்க 12,000 விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்படும்.

* ஒருங்கிணைந்த முந்திரி வளர்ச்சித் திட்டத்துக்கு ரூ.3.36 கோடி நிதி ஒதுக்கீடு.

* புதிய அரசு தோட்டக்கலை பண்ணைகள், பூங்காக்கள் அமைத்திட ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு.

* செங்காந்தள், மருந்து கூர்க்கன், அவுரி சென்னா, நித்திய கல்யாணி ஆகிய மூலிகைப் பயிர்கள் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு.

* பேரிச்சைப் பழம் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.30 இலட்சம் ஒதுக்கீடு

* மரவள்ளிப்பயிரில் மாவுபூச்சியை கட்டுப்படுத்த ரூ.1 கோடி பின்னேற்பு மானியம்.

* பாரம்பரிய காய்கறி இரகங்களை சாகுபடி செய்யவும், விதைகளை உற்பத்தி செய்யவும், ரூ.2 கோடி நிதியில் விவசாயிகளுக்கு மானியம்.

* விவசாயிகள் நிரந்தர பந்தல் அமைத்து பந்தல் காய்கறிகள் பயிரிடுவதை ஊக்குவிக்க ரூ. 9.40 கோடி நிதி ஒதுக்கீடு.

* 26,179 விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்க ரூ.170 கோடி நிதி ஒதுக்கீடு.

* பவர் டில்லர்களின் மானியத்தொகை ரூ.85 ஆயிரத்தில் இருந்து ரூ.1.20 வரை உயர்த்தப்பட்டுள்ளது.

Advertisement
Next Article