For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

App: மின் தொடர்பான பிரச்சனையா?… கவலை வேண்டாம்!… ஒரு கிளிக் செய்தால் போதும்!... மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு!

06:04 AM Apr 02, 2024 IST | Kokila
app  மின் தொடர்பான பிரச்சனையா … கவலை வேண்டாம் … ஒரு கிளிக் செய்தால் போதும்     மின்வாரியத்தின் அசத்தல் அறிவிப்பு
Advertisement

App: தமிழ்நாடு மின்சார வாரியம், வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவு மின் இணைப்புகளில் மின் பயன்பாட்டைக் கணக்கெடுக்கும் மின் வாரிய ஊழியர்களுக்கு செல்போன் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஆப்பை ஊழியர்கள் தங்களது போனில் பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கி உள்ளார்கள், இந்த ஆப் மூலம் மீட்டரில் பதிவாகியுள்ள மின்பயன்பாடு கணக்கு எடுக்கப்படுகிறது. இதனால், கட்டண விபரம் நுகர்வோருக்கு உடனே எஸ்எம்எஸ் வழியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

Advertisement

மேலும், செல்போன் ஆப்பில் கூடுதலாக சில வசதிகள் சேர்க்கப்பட உள்ளது. மின் விநியோகம் துண்டிக்கப்பட்ட மற்றும் மீண்டும் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் கண்டறிவது, புதிய மின் இணைப்புக்கு ஒப்புதல் வழங்குவது, குறைபாடு உடைய மீட்டருக்குப் பதில் புதிதாக மீட்டர் மாற்ற ஒப்புதல் தருவது உள்ளிட்ட கூடுதல் சேவைகள் ஏற்படுத்த மின்வாரியம் திட்டமிட்டிருக்கிறது.

இந்த புதிய திட்டம் சோதனை அடிப்படையில் சென்னை உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 12 மண்டல அலுவலகங்களில் தலா ஒரு பிரிவு அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் செயல்படுத்தப்பட்டு சோதித்து பார்க்கப்பட்டது. இச்சோதனை வெற்றி பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக உற்சாகமான மின்வாரியம் மாநிலம் முழுவதும் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. மின்கட்டணம் செலுத்தாமல் மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு பின் மீண்டும் மின்சாரம் வழங்கப்பட்ட இணைப்புகளை உடனுக்குடன் செல்போனில் உள்ள ஆப்பில் அதிகாரிகளால் அறிய முடியும்.

இதேபோல் மொபைல் ஆப்பில் புதிய மின்இணைப்புக்கு ஒதுக்கப்படும் மீட்டர் எண்களும் உடனே பதிவு செய்து ஒப்புதல் தர முடிகிறது. இதனால், அலுவலகத்துக்கு வந்து கணினியைப் பார்த்து ஒப்புதல் அளிக்கும் நேரம் குறைந்திருக்கிறது என்று கூறப்படுகிறது. எனவே விரைவில் மொபைல் ஆப் மூலமே மின்இணைப்புக்கு ஒப்புதல் அளிப்பது, மின்விநியோகம் துண்டிக்கப்பட்ட இணைப்புகளை கண்டறிவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள மின்சார வாரியம் முடிவு செய்துள்ளது.

Readmore: Autism: நோயல்ல!… குறைப்பாடு மட்டுமே!… இன்று உலக ஆட்டிசம் விழிப்புணர்வு தினம்!

Tags :
Advertisement