மக்களே...! வீடுகளில் பழுதான மீட்டர்களுக்கு பதிலாக புதிய மீட்டர்... தமிழக அரசு அதிரடி உத்தரவு...!
தமிழகம் முழுவதும் புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது.
தமிழக முழுவதும் பழுதான மின் மீட்டர்களுக்குப் பதிலாக புதிய மின் மீட்டர்களை மாற்றுவதற்காகவும் புதிய, தற்காலிக மின் இணைப்பு கோரி பலர் நீண்ட நாட்களாக காத்திருக்கின்றனர். தற்போதைய நிலவரப்படி, தமிழகத்தில் சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட மின் மீட்டர்கள் பழுதாகி உள்ளதாக கூறப்படுகிறது.
மின் மீட்டர் பழுதானால், மின்வாரிய விதிகளின்படி, ஓராண்டுக்கான இருமாதச் சுழற்சியின்போது அனுப்பிய அதிக மின் கட்டணத்தை வேண்டும். நுகர்வோர் செலுத்த இந்த நடைமுறை மின் மீட்டர் மாற்றப்படும் வரை இருக்கும். இதனால் நடுத்தர வர்க்கத்தினர் கடும் பாதிப்படைகின்றனர். புதிய மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த ஒரு வாரத்திற்குள் வழங்காவிட்டால் நஷ்ட ஈடு வழங்க வேண்டும். மின்சார வாரியத்தால் ஏற்பட்டுள்ள இந்த சிக்கலை தீர்க்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
மின் இணைப்புக்கு விண்ணப்பித்து 2 மாதங்களுக்கு மேலாகியும் மீட்டர் இல்லாததால் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரியம் அனுமதி அளித்துள்ள நிறுவனங்களிடம் நேரடியாக மீட்டர் வாங்கி கொடுத்தாலும் ஆய்வு செய்து பொருத்துவதாகக் கூறி,மின் இணைப்பு வழங்க, வேண்டுமென்றே தாமதம் செய்வதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்தனர். இந்நிலையில், இப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், புதிதாக 12 லட்சம் மீட்டர்களை வாங்க மின்வாரியம் பணி ஆணை வழங்கி உள்ளது.