கொட்டித்தீர்க்கும் கனமழை!. தாஜ்மஹாலில் கசிவு!. ஷாஜகான் கல்லறைக்குள் நீர் புகுந்ததால் அதிர்ச்சி!
Taj Mahal: ஆக்ராவில் பெய்து வரும் கனமழையால் தாஜ்கமகால் மேற்கூரையில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது.
உத்தரபிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. மாநிலங்களில் பெய்த பலத்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மழை காரணமாக சுரங்கப் பாதைகள் மூடப்பட்டன. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
அந்தவகையில், ஆக்ராவில் கடந்த 3 நாட்களாக ஆக்ராவில் கனமழை பெய்து வருவதால், நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த கனமழையால் தாஜ்மஹாலின் வளாகத்தில் உள்ள தோட்டம் முழுவதும் நீரில் மூழ்கியுள்ளது. இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலின் மேற்கூரைப் பகுதியில் நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. ஷாஜகானின் கல்லறை நீரால் சூழப்பட்டுள்ளது. ஆக்ராவில் கடந்த 48 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த தொடர் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இந்த நிலையில் டெல்லிக்கு நேற்று ஆரஞ்ச் எச்சரிக்கையை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. இடி-மின்னலுடன் கனமழை பெய்யும் என்றும், இன்று முழுவதும் பலத்த மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Readmore: மருமகளை தகாத முறையில் தொட்ட முகேஷ் அம்பானி!. வைரலாகும் வீடியோ!. கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!