முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

கொட்டித் தீர்க்கும் கனமழை!. காவிரியில் 19,065 கன அடி நீர் திறப்பு!

Pouring heavy rain! 19,065 cubic feet of water released in Cauvery!
07:54 AM Sep 03, 2024 IST | Kokila
Advertisement

Cauvery: காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால், கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து, தமிழகத்துக்கு வினாடிக்கு 19,065 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது.

Advertisement

ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அம்மாநிலங்களை ஒட்டியுள்ள, கர்நாடகாவின் ராய்ச்சூர், யாத்கிர், பீதர், கலபுரகி, விஜயபுரா மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதேபோல், கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை, எதிர்பார்த்ததை விட, அதிகமாக பெய்தது. இதனால், பெரும்பாலான அணைகள் நிரம்பின. அதன்பின், மழை சற்று ஓய்ந்தது. தற்போது மீண்டும் பெய்ய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக, காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தினமும் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, அனைத்து அணைகளுக்கும் நீர் வரத்து அதிகமாக உள்ளது.

இந்த வகையில், மாண்டியாவின் கே.ஆர்.எஸ்., அணையின் மொத்த கொள்ளளவு 49.45 டி.எம்.சி., தண்ணீர் ஆகும். இதில், நேற்றைய நிலவரப்படி, 48.87 டி.எம்.சி., தண்ணீர் இருப்பு இருந்தது. வினாடிக்கு 11,248 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது; வினாடிக்கு, 10,715 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. இதுபோன்று, மைசூரின் கபினி அணையின் மொத்த கொள்ளளவு, 19.52 டி.எம்.சி., தண்ணீர் ஆகும். இதில், நேற்றைய நிலவரப்படி, 19.28 டி.எம்.சி., தண்ணீர் இருந்தது.

Readmore: விவசாயிகளே குட்நியூஸ்!. ரூ.14,000 கோடியில் 7 புதிய திட்டம்!. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Tags :
cauveryHeavy rainKarnatakariverWater
Advertisement
Next Article