முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு..? உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை..!!
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரும் மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவப் பட்ட மேற்படிப்புகளான எம்டி, எம்எஸ், முதுநிலை டிப்ளமோ படிப்புகளுக்கான இடங்கள் நீட் தோ்வு மூலம் நிரப்பப்பட்டு வருகிறது. அந்தவகையில், இந்தாண்டுக்கு நீட் தோ்வு ஆகஸ்ட் 11ஆம் தேதி நாடு முழுவதும் 250-க்கும் மேற்பட்ட நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாட்டில் எம்பிபிஎஸ் முடித்த சுமாா் 25,000 மருத்துவா்கள் உள்பட நாடு முழுவதும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்க விண்ணப்பித்துள்ளனா்.
இதற்கிடையே, நீட் முதுநிலை தோ்வு வினாத்தாள் விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளமான டெலிகிராமில் தகவல் பரவியது. டெலிகிராமில் 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உறுப்பினர்களை கொண்ட 'PG NEET leaked material' என்ற குரூப்பில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு வினாத்தாள் ரூ.70,000-க்கு கிடைப்பதாகவும், வினாத்தாள் வேண்டும் என்றால் ரூ.35,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் தகவல் பரவியது. ஆனால், இதற்கு மத்திய அமைச்சர் மறுப்பு தெரிவித்திருந்தார். இப்படியாக வதந்திகளை பரப்பியவர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இப்படியான குளறுபடிகள் இருந்த நிலையில், முதுகலை தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. இந்த மனுவை விரைவாக விசாரிக்கக் கோரி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அமர்வு முன்பு கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட தமைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்கை இன்று விசாரிக்கிறது.
Read More : செம குட் நியூஸ்..!! வட்டி விகிதத்தில் மாற்றமில்லை..!! ஆனால், ஒரு ட்விஸ்ட்..!! வெளியான அறிவிப்பு..!!