For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Note...! தேர்தல் நேரத்தில் இது போன்ற செய்தி பதிவு செய்தால் சைபர் கிரைம் நடவடிக்கை...! காவல்துறை எச்சரிக்கை...!

06:39 AM Mar 19, 2024 IST | 1newsnationuser2
note     தேர்தல் நேரத்தில் இது போன்ற செய்தி பதிவு செய்தால் சைபர் கிரைம் நடவடிக்கை     காவல்துறை எச்சரிக்கை
Advertisement

குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை வெளியிட்டால் சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Advertisement

இது குறித்து தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; பாராளுமன்ற தேர்தல் 2024-க்கான தேர்தல் அறிவிப்பு 16.03.24-ம் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேனி மாவட்டத்தில் சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல் நடத்திடும் பொருட்டு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவோ அல்லது சமூக வலைதளங்கள் மூலமாகவோ உண்மைக்கு புறம்பான செய்தியை எழுத்து வடிவிலோ, காட்சி வடிவிலோ அல்லது ஒலி வடிவிலோ, (Text Message, Image or Video) கொண்டு வெளியிடுபவர்கள் மீது சைபர் கிரைம் காவல் நிலையம் மூலமாக சம்மந்தப்பட்ட நபர்களை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அது போன்ற நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்கள் அல்லது சம்மந்தப்பட்ட நபர்கள் புகார் அளிப்பதற்கென்றே பிரத்யேகமாக தேனி மாவட்ட காவல் துறையால் புதிதாக தொலைபேசி எண்கள் (04546-261730 மற்றும் அலைபேசி எண்: 9363873078) அறிமுகப்படுத்தப்பட்டு தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் 24 மணிநேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. எனவே உண்மைக்கு புறம்பான செய்தியின் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பொதுமக்களோ அல்லது சம்மந்தப்பட்ட நபர்களோ மேற்கண்ட தொலைபேசி மற்றும் அலைபேசி எண்களில் புகார் அளிக்குமாறு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags :
Advertisement