For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

இது புதுசா இருக்கே... 'கடலுக்கடியில் தபால் பெட்டி..' தினமும் கடிதம் போடும் மக்கள்!! சுவாரஸ்ய தகவல் இங்கே..!

07:53 PM May 27, 2024 IST | Mari Thangam
இது புதுசா இருக்கே     கடலுக்கடியில் தபால் பெட்டி    தினமும் கடிதம் போடும் மக்கள்   சுவாரஸ்ய தகவல் இங்கே
Advertisement

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் வித்தியாசமான தபால் பெட்டியில், ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான தபால் அட்டைகள் போடப்படுகிறது. இதுகுறித்த சுவாரஸ்யமான தகவல்களை இங்கு பார்க்கலாம்..

Advertisement

பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன் மூலமாக எந்த நாட்டில் இருப்பவர்களுடனும் பேச முடியும்.

போன் மற்றும் இன்டர்நெட் வந்த பின்னர் கடிதம் எழுதும் பழக்கம் மக்களிடம் குறைந்து போய்விட்டது. ஆனால்,  இன்றும் கடிதம் போடும் மக்கள்  இருந்து வருகின்றனர். எண்ணிக்கை குருவாக இருந்தாலும் முக்கிய விஷயங்கள் இன்றும் தபால் மூலம் பரிமாறப்படுகிறது. இந்நிலையில் சில தனித்துவமான தபால் நிலையங்களும் உலகில் உள்ளன.

இந்த நிகழ்வை இன்னும் சுவாரஸ்யப்படுத்தும் நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. உலகின் உயரமான தபால் நிலையம் நம் இந்தியாவில் இருப்பது பலருக்கு தெரியும். அதே போல உலகின் தாழ்வான தபால் நிலையம் என்ற ஒன்றும் இருக்கும் தானே. அப்படி ஒன்றுதான் கடலுக்கு அடியில் அமைக்கப்பட்டிருக்கும் தபால் பெட்டி. இந்த பெட்டிக்குள் கடிதத்தை போட வேண்டும் என்றால் கடலுக்குள் நீந்தி செல்ல வேண்டும். அதன் பிறகு தான் கடிதத்தை தபால் பெட்டியில் போட முடியும். இது எங்கு அமைந்துள்ளது என்று பார்க்கலாம்.

கடலுக்கு அடியில் அமைந்திருக்கும் இந்த தபால் பெட்டி ஜாப்பானின் சுசாமி பே என்ற இடத்தில் உள்ளது. கரையில் இருந்து சுமார் 10 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட்டு இருக்கும் இந்த பெட்டியில், உங்களுடைய கடிதத்தை அடியில் நீந்தி சென்றுதான் போடவேண்டும். இதற்காகவே தண்ணீரால் பாதிக்காத தபால் அட்டைகள் தயாரிக்கப்படுகிறது. அந்த அட்டையில் ஆயில் பெயிட் மூலம் எழுதி அதில் போட வேண்டும். அதன் பிறகு அங்கு பணிபுரிபவர்கள் உங்கள் கடிதத்தை எடுத்து நீங்கள் குறிப்பிட்ட முகவரியில் கொண்டு சேர்ப்பார்கள்.

இந்த தபால் பெட்டியை அங்கீகரிக்கும் விதமாக கடந்த 2002 ஆம் ஆண்டு கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது. இந்த தபால் பெட்டியானது சுற்றுலா பயணிகளுக்கு சாகச பயணமாக வரவேற்பை பெற்ற நிலையில், இதற்கான பிரத்தியேக தபால் அட்டை மற்றும் ஆயில் பெயிட் மூலம் வணிக ரீதியாகவும் சிறந்து விளங்குகிறது. மேலும் இதில் ஒரு நாளைக்கு சுமார் 1000 முதல் 1500 தபால் அட்டைகள் வரை போடப்படுவதாக கூறப்படும் நிலையில், இதற்கு சிறப்பான வரவேற்பும் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Read More ; மரங்களே இல்லாத நாடு பற்றி தெரியுமா? கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஒரு மரம் கிடையாது..! என்ன காரணம் தெரியுமா..?

Tags :
Advertisement