முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

’உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி’..? ’பாஜகவால் அது முடியவே முடியாது’..!! கனிமொழி எம்பி பரபரப்பு பேட்டி..!!

Kanimozhi MP said, 'Governor should be neutral and should not behave like a party member'.
04:34 PM Aug 14, 2024 IST | Chella
Advertisement

"ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும், கட்சிக்காரர் போல் நடந்து கொள்ள கூடாது" என்று கனிமொழி எம்பி தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியில் எம்பிஏ படிப்பில் பட்டம் பெற்ற 18 பேருக்கு பட்டமளிக்கும் விழா நடைபெற்றது. இதில், எம்பி கனிமொழி கலந்துகொண்டு பட்டங்களை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மேடையில் அவர், ”திருநர்கள், திருநங்கைகள் இவர்களோடு நான் தொடர்ந்து பயணிக்க கூடிய ஒருவராக இருந்திருக்கிறேன். காலத்தில் திருநங்கைகள் ஒரு பாஸ்போர்ட் வாங்க வேண்டும் என்றாலும் வாங்க முடியாது, கல்லூரியில் சேர முடியாது, திருநங்கைகள் இருக்கிறார்கள் என்று எந்த அடையாளமும் இருக்காது.

திருநங்கைகள் கல்லூரிகளுக்குச் செல்ல விரும்பினால் நீங்கள் ஆணா, பெண்ணா என்று கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் அவர்களது வாழ்க்கை முற்றுப்புள்ளியோடு நின்ற சூழல் இருந்தது. ஆனால், தற்போது திருநங்கைகளுக்கு ரேஷன் கார்டு உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் செய்து கொடுத்த தலைவர் தான் கலைஞர். பெரியார் வழியில் வந்த இந்த ஆட்சி இன்று வரை அதைச் செய்து கொண்டிருக்கிறது.

எங்களால் தலை நிமிர்ந்து நிற்க முடியும் என்ற சூழ்நிலையை உருவாக்கக்கூடியது கல்வி. நீங்கள் பல பேருக்கு முன்னுதாரணமாக மாற முடியும். இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து மனிதர்களுக்கும் முன் உதாரணமாக இருப்பவர்கள் நீங்கள்” என்று பேசினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”2008ஆம் ஆண்டு முதல் முதலாக கலைஞர் தான் திருநங்கைகளுக்கு ஒரு ரெகக்னிஷன், எதிர்காலத்திற்காக ஒரு அங்கீகாரத்தைக் கொடுத்தார். திருநங்கைகளை முதன்முதலாக அங்கீகரித்த மாநிலம் தமிழ்நாடு தான்.

சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருநங்கைகள் பட்டப்படிப்பு படிப்பதற்கு தடை வந்துவிடக் கூடாது என்பதற்காக படிப்பு மற்றும் தங்கும் விடுதி செலவை அரசு ஏற்றுக்கொள்ளும் என்று அறிவித்துள்ளார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “ஆளுநர் நடுநிலையாக இருக்க வேண்டும். அவர் ஏதோ ஒரு கட்சிக்காரர் போல் நடந்து கொள்ளும் பொழுது எதிர்க்கட்சிகளும் அப்படிதான் அறிவிப்பார்கள். உதயநிதி துணை முதலமைச்சர் என்ற அறிவிப்பை வெளியிடக்கூடிய ஒரே ஒரு நபர் நம்முடைய முதலமைச்சர் தான், அதை அவர் தான் முடிவு செய்வார். பாஜக தமிழகத்தில் வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. அதிமுக பிரச்சனையை அவர்கள் தான் சரி செய்து கொள்ள முடியும். திமுக அதற்கு அறிவுரை வழங்க முடியாது” என்றார்.

Read More : செயற்கை குளிர்பானங்களில் என்னென்ன கலக்கப்படுகிறது தெரியுமா..? மக்களே தெரிஞ்சிக்கோங்க..!!

Tags :
அண்ணாமலைஆளுநர்கனிமொழிதிமுகதிருநங்கைகள்
Advertisement
Next Article