For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

Tn Govt: பட்டதாரி ஆசிரியர் பணியிடம்... வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு...!

Post Graduate Teaching... Publication of Guidelines.
07:19 AM Aug 17, 2024 IST | Vignesh
tn govt  பட்டதாரி ஆசிரியர் பணியிடம்    வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு
Advertisement

உபரி ஆசிரியர்கள், உபரி மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் என சரியாக கணக்கிட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement

இது குறித்து தொடக்கக் கல்வித் துறை இயக்குநரகம் சார்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில்; நடப்பு கல்வியாண்டில் (2024-25) கடந்த ஆகஸ்ட்1-ம் தேதி நிலவரப்படி பள்ளிகளில்உள்ள மாணவர் எண்ணிக்கைக்கேற்ப இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிர்ணயம் செய்ய வேண்டும். அதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி, தமிழ்வழி மற்றும் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களை தனித்தனியாக கணக்கிட்டு வகுப்புவாரியாக பணி நிர்ணயம் செய்யவேண்டும். இயக்குநரின் பொதுத்தொகுப்புக்கு சரண் செய்யப்பட்ட பணியிடங்களை மீண்டும் கணக்கில் கொண்டுவரக்கூடாது. மேலும், உபரி ஆசிரியர்கள், உபரி மற்றும் கூடுதல் தேவையுள்ள பணியிடங்கள் என சரியாக கணக்கிட்டு விவரங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மாணவர் எண்ணிக்கையில் ஏதும் சந்தேகம் இருப்பின் வட்டாரக் கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும். இதுதவிர எமிஸ் தளத்தில் பதிவேற்றப்படும் தகவல்கள் தவறானதாக இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலர்களே பொறுப்பேற்க நேரிடும். எனவே, கூடுதல் கவனத்துடன் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றி ஆசிரியர்களை பணி நிர்ணயம் செய்து விவரங்களை இயக்குநரகத்துக்கு துரிதமாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement