சீதாப்பழம் சுவையானது தான்.! அவற்றால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்ன என்று தெரியுமா.?
நம் நாட்டின் சீசன் பழ வகைகளில் முக்கியமான ஒன்று சீதாப்பழம். தித்திக்கும் சுவை கொண்ட இந்த பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. வைட்டமின்கள் சி மற்றும் ஏ, பொட்டாசியம், தாமிரம், மற்றும் நார்ச்சத்துக்கள் இந்த பழத்தில் நிறைந்திருக்கிறது. இது பல்வேறு நோய்களுக்கும் சிறந்த மருந்தாக விளங்குகிறது. ஆனால் சிலருக்கு இந்த பழத்தை சாப்பிடுவதால் உடல் உபாதைகள் மற்றும் அலர்ஜி ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இது தொடர்பான விளக்கங்களை இந்த பதிவில் காணலாம்.
சரும பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் அலர்ஜி பிரச்சனை உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இந்த பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து இருப்பதால் செரிமான பிரச்சனை உள்ளவர்களும் இதனை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏனெனில் இந்த பழத்தை அதிகமாக சாப்பிடும் போது வயிற்றுப்போக்கு மற்றும் செரிமானக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். சீதாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு ஃபுட் பாய்சன் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சீதாப்பழம் இரும்பு சத்துக்களை அதிகம் கொண்ட ஒரு பழ வகையாகும். இவற்றில் அதிகமான இரும்புச்சத்து சில நேரங்களில் உடலுக்கு எதிர்வினைகளை ஏற்படுத்தக் கூடும். இதனால் குமட்டல் மற்றும் வாந்தி போன்றவை ஏற்படவும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் அழற்சி ஏற்பட காரணமாக அமைகிறது. இவற்றின் விதைகளும் உடலில் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். சீதாப்பழத்தின் விதைகளில் இருக்கக்கூடிய என்சைம்கள் செரிமான பிரச்சனை ஏற்படுவதற்கு முக்கிய காரணமாக அமைகிறது.