"அமெரிக்காவில் உள்நாட்டு போர் நடக்கணும் அது எங்களுக்கு தேவை" - ரஷ்ய அதிபரின் கூட்டாளி சர்ச்சைக்குரிய கருத்து.!
அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்படுவது உலகத்திற்கே மகிழ்ச்சியான செய்தி என ரஷ்யா அதிபர் விளாடிமிர் புட்டினின் முன்னாள் ஆலோசகரும் அவரது நெருங்கிய கூட்டாளி செர்ஜி மார்கோவ் கூறியிருக்கும் கருத்துக்கள் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
புத்தாண்டு நிகழ்ச்சிகளை முன்னிட்டு பேசிய அவர் இந்த கருத்தை பதிவு செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் செர்ஜி மார்கோவ் " இந்த வருடம் ரஷ்யர்கள் புத்தாண்டை மர டிராகன் ஆண்டாக கொண்டாட இருக்கிறார்கள். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் நிகழ்வதற்கான சூழல்கள் நிலவி வருகிறது. நிச்சயமாக அங்கு உள்நாட்டு போர் நிகழும். அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் ஏற்படும் உள்நாட்டு போர் உலக மக்கள் அனைவருக்கும் இந்த புத்தாண்டில் நல்ல செய்தியாக அமையும். இதைத்தான் எங்கள் டிராகன் கூறுவதாக நினைக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
இதுகுறித்து மேலும் தொடர்ந்து பேசிய அவர் " அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்படுவது ரஷ்யாவிற்கு நல்லது. மேலும் அது எங்களுடன் போர் புரிந்து வரும் உக்ரைனுக்கும் நல்லது. அமெரிக்கா உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டால் உக்ரைன் எங்களுடன் போரை நிறுத்திவிட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தயாராகும்" எனவும் தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் உள்நாட்டுப் போர் ஏற்படுவது உக்ரேன் மக்களுக்கு மிகவும் நல்ல விஷயம். ஏனெனில் அமெரிக்கா உக்ரைனை ஒரு அடிமை போல நடத்தி வருகிறது. தன்னுடைய காலணி ஆதிக்க நாடாகத்தான் உக்ரைனை பார்க்கிறது. அமெரிக்காவின் பொம்மையாக உக்ரைன் செயல்படுகிறது எனவும் தெரிவித்திருக்கிறார்.
கடந்த டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து உக்ரைனின் மீது இதுவரை 300 ஏவுகணைகளையும் 200 ட்ரோன்களையும் செலுத்தி தாக்குதல் நடத்தி இருக்கிறது ரஷ்யா. இதற்கு உக்ரைன் நடத்திய எதிர் தாக்குதலில் ஒரே ஒரு ரஷ்யர் மட்டும் கொல்லப்பட்டிருக்கிறார். உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே நடைபெற்று வரும் போர் உலகப் பொருளாதாரத்தை மிகவும் பாதித்திருக்கிறது. மேலும் தற்போது அமெரிக்கா குறித்து ரஷ்யாவின் முன்னாள் ஆலோசகர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் உலக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தி இருக்கிறது.