பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000..!! நேரடியாகவா..? வங்கிக் கணக்கா..? வெளியான முக்கிய அறிவிப்பு..!!
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் சிறப்பு பரிசுத்தொகை தொடர்பான முக்கிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடிட அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் உள்ளிட்டோரை தவிர்த்து மற்ற குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
வங்கிக் கணக்கில் ரூ.1,000..?
இந்த தொகையை நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்த தமிழ்நாடு அரசு ஆலோசனை செய்த நிலையில், இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. நேரடியாக வங்கியில் செலுத்த வேண்டுமென்றால், கும்ப தலைவர்களின் வங்கிக் கணக்கு தேவை. அதோடு, வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், அரசு கொடுக்கும் பொங்கல் பரிசு பயன் இல்லாமல் போய்விடும். இதன் காரணமாக நேரடியாக வங்கியில் பணம் செலுத்துவதற்கான நல்லவை, தீமைகளை ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாம்.
வங்கிக் கணக்கில் இல்லாமல் நேரடியாக பணம் வழங்கும் பட்சத்தில் பொங்கல் பரிசுக்கான டோக்கன் வரும் 20ஆம் தேதியில் இருந்து வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இம்முறையும் மஞ்சள் பையில் பொங்கல் பரிசு வழங்கப்படும். கடந்த 2022இல் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 2023இல் பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்ட பரிசு பொருட்கள் கடந்தாண்டு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read More : இசைக்கடவுளுக்கே இந்த நிலைமையா..? கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட இளையராஜா..!! கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்..!!