For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை..!! பெண்களே ரூ.2,000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது..?

The Madras High Court has issued a recommendation regarding the crediting of Pongal prize money to bank accounts.
07:20 AM Dec 04, 2024 IST | Chella
மகளிர் உரிமைத்தொகையுடன் பொங்கல் பரிசுத் தொகை     பெண்களே ரூ 2 000 உங்கள் வங்கிக் கணக்கிற்கு வரப்போகுது
Advertisement

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த சுந்தர விமலநாதன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில், ”தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசுத் தொகுப்பில் சர்க்கரைக்கு பதிலாக ஒரு கிலோ வெல்லம் வழங்க வேண்டும் என்றும் ரூ.1,000 தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டுமென்றும் கடந்தாண்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தேன்.

Advertisement

இந்த வழக்கில், வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்துவது தொடர்பாக அடுத்தாண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. ஆனால், தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு, தேங்காய் போன்ற பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், பொங்கல் பரிசுத்தொகையை வங்கிக்கணக்கில் செலுத்தலாமே? என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அரசுத் தரப்பு, ”ரூ.1,000-த்தை வங்கிக்கணக்கில் செலுத்தும் போது, குறைந்தபட்ச தொகை இருப்பில் இல்லை என்பதற்காக வங்கியில் இருந்து பணம் பிடித்தம் செய்யப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து மனுதாரர் தரப்பில், மகளிர் உரிமைத் தொகையை செலுத்தும்போது, பொங்கல் பரிசுத் தொகையையும் சேர்த்தே வங்கி கணக்கில் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நீதிபதிகள், உயர்நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்தது போல் பொங்கல் பரிசுத் தொகையை வங்கிக் கணக்கில் செலுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக கூடுதல் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை டிச.19ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Read More : ஆடாதொடை மூலிகை செடியின் மருத்துவ குணங்கள் பற்றி தெரியுமா..? தேனில் கலந்து சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா..?

Tags :
Advertisement