முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

திடீர் மாற்றம்...! பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 ரொக்கமாக வழங்கப்படும்...! ஆளுநர் ஒப்புதல்...!

06:00 AM Jan 09, 2024 IST | 1newsnationuser2
Advertisement

புதுச்சேரி அரசு சார்பில் பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணம் தருவது தொடர்பான கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

Advertisement

புதுச்சேரியில் சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு பொங்கல் பண்டிகையை ஒட்டி கடந்த 4-ம் தேதி ரூ.1,000 வழங்கப்பட்டது.‌ ஒரு லட்சத்து 30,791 சிவப்பு ரேஷன் அட்டைதாரரர்களுக்கு வங்கிக் கணக்கில் தொகை செலுத்தப்பட்டது என அமைச்சர் தேனீ ஜெயக்குமார் அறிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, பச்சைப்பருப்பு, கடலைப்பருப்பு உட்பட 10 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்க அரசு திட்டமிட்டது. கடந்த ஆண்டு பொங்கல் பொருட்களுக்கு பதிலாக பயனாளிகள் வங்கிக்கணக்கில் பணம் செலுத்தப்பட்டது. அதேபோல இந்த ஆண்டும் பொங்கல் சிறப்பு பொருட்கள் தொகுப்புக்கு பதிலாக அரசு பணம் வழங்க திட்டமிட்டது. அதற்காக ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. பொங்கல் சிறப்பு பொருட்களுக்கு பதிலாக ரூ.500 பணம் தருவது தொடர்பான கோப்புக்கு ஆளுநர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை வழங்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் அட்டவணை, பழங்குடியினர் இனமக்கள், மீனவர், நெசவாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தவிர புதுச்சேரியில் உள்ள 1,30,791 வறுமை கோட்டிற்கு கீழ் வசிக்கும் குடும்ப உணவு பங்கீட்டு அட்டைதாரர்களில் ஓர் நபர் கொண்ட அட்டைதாரர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும்.

Tags :
governormoneypondicherryPongalration card
Advertisement
Next Article