பொங்கல் பரிசு..!! தமிழக மக்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! ரூ.2,000 தர்றாங்களாம்..? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!!
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து ஒரு சில தகவல்கள் கடந்த சில நாட்களாகவே வட்டமடிக்க துவங்கி உள்ளன. தற்போது குடும்பத் தலைவிகளுக்கு 1,000 உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உரிமைத்தொகை வழங்குவதில் சில சலசலப்புகளும் எழுந்தபடியே உள்ளது. தகுதியுள்ள அனைவருக்குமே 1,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. அதாவது, மகளிர் உரிமைத்தொகை விவகாரத்தில் அதிருப்தி நிலவுவதாலும், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதாலும் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வரும் பொங்கல் பரிசு தொகுப்பில் 1,000 ரூபாய்க்கு பதிலாக 2000 ரூபாய் வழங்கலாமா என்று தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
இதற்கு நடுவில், 2 நாட்களுக்கு முன்பு திமுக அமைச்சர் பெரிய கருப்பன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "கூட்டுறவு வங்கிகளில் கல்வி கடன் வழங்க முயற்சி எடுக்கப்படும். இதுகுறித்து முதல்வருடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பார்" என்று நம்பிக்கை தகவலை வெளியிட்டிருந்தார். ஆனால், 2000 ரூபாய் வழங்கப்படுமா? என்பது குறித்து கூறவில்லை. அதேபோல, இதுகுறித்து எந்த அறிவிப்பையும் அரசு தரப்பிலும் வெளியிடவில்லை.
இந்நிலையில்,அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். "தமிழகத்தில் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான பயனாளிகளின் ஆண்டு குடும்ப வருமானம் ரூபாய் 1.20 லட்சம் என்பதை உயர்த்துவதற்கான கோரிக்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பொங்கலுக்கு பரிசு தொகுப்பு வழங்கப்படுமா அல்லது ரூபாய் 2000 ரொக்க பணம் வழங்கப்படுமா என்பதை முதல்வர் அரசு அதிகாரிகளுடன் ஆலோசித்து விரைவில் பொங்கல் பரிசுக்கான அறிவிப்பை வெளியிடுவார்" என்று தெரிவித்தார்.