இன்று முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு..!! தொடங்கி வைக்கிறார் முதல்வர் முக.ஸ்டாலின்..!! மக்களே உங்களுக்கு டோக்கன் வந்துருச்சா..?
இந்தாண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 14ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. அதனைத் தொடர்ந்து 15ஆம் தேதி (திருவள்ளுவர் நாள்), ஜனவரி 16ஆம் தேதி (உழவர் நாள்) கொண்டப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதால், வெளியூர்களில் தங்கியிருக்கும் மக்கள், சொந்த ஊர்களுக்கு செல்வார்கள்.
அதேபோல், பொங்கல் பண்டிகைக்கு 14ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அரசு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், சொந்த ஊர்களுக்கு சென்று வர தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் நாளை முதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இம்முறை 22,000-க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்பட இருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு வழங்கப்பட உள்ளது. பச்சரிசி, சர்க்கரையை தமிழக நுகர்பொருள் வாணிப கழகமும், கரும்பை கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்துள்ளன. அவை, மாநிலம் முழுதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. அதேபோல், வேட்டி சேலையும் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இதற்கான டோக்கன்கள் வீடு வீடாக சென்று ரேஷன் கடை பணியாளர்கள் வழங்கி வந்தனர்.
இந்நிலையில் தான், பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை சென்னை சைதாப்பேட்டை 169-வது வார்டில் இன்று முதலமைச்சர் முக.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பொங்கல் பரிசுத் தொகுப்பை வாங்க ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, தேதி, நேரம் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, மறக்காமல் அனைவரும் பொங்கல் தொகுப்பை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Read More : கொலஸ்ட்ரால் அதிகமா இருக்கா..? உங்கள் உடல் எடை வேகமாக அதிகரிக்குதா..? சற்றும் தாமதிக்காதீங்க..!!