Pongal 2025 | சூரிய பொங்கல், மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம் எது தெரியுமா..?
நாளை பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் வைக்க உகந்த நேரம் என்ன என்பதை பார்க்கலாம்.
பொங்கல் பண்டிகை என்பது அறுவடைத் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது. புதிய பானையில், புத்தரிசி இட்டு, அரிசியில் இருந்து பால் பொங்கி வழிந்து வரும். அதேபோல, தை பிறந்துள்ள புத்தாண்டு முழுவதும் நம் வாழ்வும், வளமும் அந்தப் பால் போன்று பொங்கி சிறக்கும் என்பது நம்பிக்கை. 2025ஆம் ஆண்டில் ஜனவரி 13ஆம் தேதி போகிப் பண்டிகை துவங்கி, ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கல் வரை மொத்தம் 4 நாட்கள் வருகின்றன.
ஜனவரி 13ஆம் தேதி போகிப் பொங்கலும், ஜனவரி 14ஆம் தேதி சூரிய பொங்கலும், ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கலும், ஜனவரி 16ஆம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில், ஜனவரி 14ஆம் தேதி காலை 07.30 முதல் 08.30 வரையும், காலை 10.30 முதல் 11.30 வரையிலும், பொங்கல் வைக்கலாம். காலை 9 மணி முதல் 10.30 மணி வரை எமகண்டம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கல் வைக்கக் கூடாது. மேலும், அதிகாலை 3 மணி முதல் 4.30 மணி வரை ராகு காலம் என்பதால் அந்த நேரத்தில் பொங்கலுக்கான முன்னேற்பாடுகளை தவிர்க்க வேண்டும்.
அதேபோல், ஜனவரி 15ஆம் தேதி மாட்டுப் பொங்கல் வைக்க உகந்த நேரம் காலை 9.30 முதல் காலை 10.30 மணி வரை ஆகும். அதைப்போலவே, மாலை 4.30 முதல் 5.30 மணி வரை மாட்டுப்பொங்கல் வைக்கலாம்.