For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

8 மாநிலங்களில் இன்று நடைபெறும் 5-ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு...!

05:30 AM May 20, 2024 IST | Vignesh
8 மாநிலங்களில் இன்று நடைபெறும் 5 ம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு
Advertisement

மக்களவைத் தேர்தலின் 5-ம் கட்ட வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஒடிசா சட்டப்பேரவையின் 35 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

Advertisement

வாக்குப்பதிவு சுமுகமாகவும் பாதுகாப்பான சூழலிலும் நடைபெறுவதை உறுதி செய்ய தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. வாக்குச் சாவடிகளில் போதுமான நிழல், குடிநீர் வசதிகள், சாய்வுதள வசதிகள், கழிப்பறைகள் மற்றும் பிற அடிப்படை வசதிகள் இருக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெப்பமான வானிலை உள்ள பகுதிகளில் வெப்பத்தை சமாளிக்க போதுமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்குத் தேவையான பிற பொருட்கள் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளுக்கு அதிக எண்ணிக்கையில் வந்து வாக்களித்து, பொறுப்புடனும் பெருமையுடனும் செயல்படுமாறு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது. மக்களவைத் தேர்தல் 2024-ல் இதுவரை நடைபெற்ற 4 கட்ட வாக்குப் பதிவில் சராசரியாக சுமார் 66.95 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தற்போதைய பொதுத் தேர்தலின் முதல் நான்கு கட்டங்களில் சுமார் 45 கோடியே 10 லட்சம் மக்கள் ஏற்கெனவே வாக்களித்துள்ளனர்.

பீகார், ஜம்மு-காஷ்மீர், லடாக், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, ஒடிசா, உத்தரபிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள சில தொகுதிகளில் ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடைபெறுகிறது. கடந்த காலங்களில் கிராமப் புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் குறைந்த வாக்குப் பதிவே காணப்பட்டது. தற்போது மும்பை, தானே, லக்னோ போன்ற நகரங்கள் இந்த 5-ம் கட்டத்தில் தேர்தலைச் சந்திக்கின்றன. இந்த நகரங்களின் மக்கள் அதிக எண்ணிக்கையில் திரண்டு வந்து வாக்களிக்குமாறு தேர்தல் ஆணையம் குறிப்பாக கேட்டுக்கொண்டுள்ளது.

Advertisement