முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நாய் குரைத்ததால், கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகருக்கு நேர்ந்த கொடூரம்!!!

politician was killed whos dog barked at a stranger in the road
06:31 PM Jan 11, 2025 IST | Saranya
Advertisement

திருச்சி மாவட்டம், நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதியில் முத்துகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் பகுதி ஒன்றிய செயலாளராக உள்ளார். இந்நிலையில், நெய் கிருஷ்ணன் என்ற நபர் ஒருவர், நேற்று இரவு தெருவில் நடந்து சென்றுள்ளார். அப்போது முத்துகிருஷ்ணன் வளர்த்து வரும் நாய், நெய் கிருஷ்ணனை பார்த்து குரைத்துள்ளது. இதனால் நெய் கிருஷ்ணனுக்கும் முத்துகிருஷ்ணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த இருவரும், ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதையடுத்து, தலையில் பலத்த காயம் அடைந்த முத்துக்கிருஷ்ணன்,
ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது சம்பவம் குறித்து தகவல் அறிந்த கொள்ளிடம் போலீசார், கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, திமுகவின் கூட்டணி கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Read more: “என்ன கல்யாணம் பண்ணிக்கோ” ஆசையை கேட்ட காதலி; பிரிட்ஜில் இருந்து விழுந்த உருவம்.. போலீசாரை அதிர வைத்த சம்பவம்..

Tags :
barkedcommunistdog
Advertisement
Next Article