முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நெருங்கிய 2024 தேர்தல்...! அரசியல் கட்சிகள் என்னென்ன செய்ய கூடாது..‌.? தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு...!

06:00 AM Feb 07, 2024 IST | 1newsnationuser2
Advertisement

தேர்தல் ஆணையம், அதன் முந்தைய உத்தரவுகளின் தொடர்ச்சியாக தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கையிலும், குழந்தைகளைப் பயன்படுத்துவது குறித்து கட்சிகள் மற்றும் வேட்பாளர்களுக்கு, கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. சுவரொட்டிகள் ஒட்டுதல், துண்டுப்பிரசுரங்கள் விநியோகம் அல்லது கோஷமிடுதல், பிரச்சாரப் பேரணிகள், தேர்தல் கூட்டங்கள் போன்றவற்றில் பங்கேற்பது உட்பட எந்த வடிவத்திலும் குழந்தைகளைத் தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக் கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தல் நடைமுறையின் போது கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளை எந்த வகையிலும் பயன்படுத்துவதை தேர்தல் ஆணையம் சகித்துக் கொள்ளாது என தெரிவித்துள்ளது.

Advertisement

தேர்தல் நேரத்தில் பேரணிகள், கோஷமிடுதல், சுவரொட்டிகள் அல்லது துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தல் அல்லது தேர்தல் தொடர்பான வேறு எந்த நடவடிக்கையிலும் குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகள் அறிவுறுத்தப்படுகின்றன. அரசியல் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் குழந்தைகளைத் தங்கள் கைகளில் வைத்திருப்பது, வாகனம் அல்லது பேரணிகளில் ஒரு குழந்தையைத் தூக்குவது உட்பட எந்த வகையிலும் பிரச்சார நடவடிக்கைகளுக்கு குழந்தைகளைப் பயன்படுத்தக்கூடாது.

கவிதை, பாடல்கள், உரையாடல்கள், அரசியல் கட்சி / வேட்பாளரின் சின்னங்களை காட்சிப்படுத்துதல், அரசியல் கட்சியின் சித்தாந்தத்தை வெளிப்படுத்துதல், ஒரு அரசியல் கட்சியின் சாதனைகளை ஊக்குவித்தல் அல்லது மாற்று அரசியல் கட்சிகள் / வேட்பாளர்களை விமர்சித்தல் உள்ளிட்ட எந்த வகையிலும் அரசியல் பிரச்சாரத்திற்குக் குழந்தைகளைப் பயன்படுத்துவதற்கும் இந்தத் தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், ஓர் அரசியல் தலைவருக்கு அருகில் ஒரு குழந்தை தனது பெற்றோர் அல்லது பாதுகாவலருடன் இருப்பது, வழிகாட்டுதல்களை மீறுவதாகக் கருதப்படாது. தேர்தல் தொடர்பான பணிகள் அல்லது நடவடிக்கைகளின் போது குழந்தைகளை எந்தவொரு வகையிலும் ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்துத் தேர்தல் அதிகாரிகளுக்கும், அமைப்புகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags :
childrenelection campaignelection commission
Advertisement
Next Article