கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் கண்ணீர் அஞ்சலி..!!
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த், கொரோனா தொற்று காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் காலமானார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற நடிகர் விஜயகாந்த், பூரண குணமடைந்து வீடு திரும்பினார். பின்னர், தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று தொண்டர்களையும் உற்சாக மூட்டினார்.
இந்நிலையில், நேற்று மாலை உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா தொற்று உள்ளதாகவும் சுவாசிப்பதில் சிக்கல் இருப்பதால் வென்டிலேட்டர் உதவியுடன் சுவாசித்து வருவதாகவும் தேமுதிக தலைமை கழகம் இன்று காலை அறிவித்திருந்தது.
இந்நிலையில், விஜயகாந்த் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இது தேமுதிக தொண்டர்களை மட்டுமல்லாது தமிழக மக்களையும் அதிர்ச்சியடைய செய்தது. மரணம் அறிவிக்கப்பட்ட உடனேயே அவரது உடல், சாலிகிராமம் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்நிலையில், மறைந்த விஜயகாந்தின் உடலுக்கு அரசியல் தலைவர்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பாதுகாப்பிற்காக 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.