For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

அரசியல் பிரளயம்!… மோடி ஜாதகத்தில் ஏழரை!... ஆட்சிக்கே வந்தாலும் பிரதமராக முடியாது!… திமுகவுக்கு என்ன நிலைமை தெரியுமா?… ஜோதிடர் கணிப்பு!

07:07 AM Jun 03, 2024 IST | Kokila
அரசியல் பிரளயம் … மோடி ஜாதகத்தில் ஏழரை     ஆட்சிக்கே வந்தாலும் பிரதமராக முடியாது … திமுகவுக்கு என்ன நிலைமை தெரியுமா … ஜோதிடர் கணிப்பு
Advertisement

Modi: நாளை வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் நிலை என்ன என்பது குறித்து பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா கணித்துள்ளார்.

Advertisement

மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு எண்ணிக்கை நாளை நடைபெறவுள்ளது. இந்தநிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் 3வது முறையாக பாஜக ஆட்சியமைக்கும் என்று தெரிவிக்கின்றன. இதேபோல், மற்ற கட்சிகளின் வாக்கு சதவீதமும் அதிகரித்து காணப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்தநிலையில், பிரபல ஜோதிடர் சச்சின் மல்ஹோத்ரா, முந்தைய தேர்தல்களுடன் ஒப்பிட்டு, பாஜக, காங்கிரஸ், பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோரின் ஜாதகங்களையும் அவர் ஆய்வு செய்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். அந்தவகையில், காங்கிரஸ் தனது வெற்றி இடங்களை இரட்டிப்பாக்கலாம் ஆனால் ஆட்சியைக் கைப்பற்ற முடியாது என்று கூறியுள்ளார்.

இந்தியா" கூட்டணியில் உள்கட்சி வேறுபாடுகள் அதிகரிக்கும் என்றும் கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே), திமுக போன்ற சில கட்சிகள் நல்ல வெற்றியைப் பதிவு செய்யும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதேபோல், பாஜக ஆட்சியமைக்கும், ஆனால் சர்ச்சைகள் மற்றும் விரும்பத்தகாத சம்பவங்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

2019 மக்களவைத் தேர்தலை விட பாஜகவுக்கு வாக்கு சதவீதம் மற்றும் வெற்றி பெறும் தொகுதி இடங்கள் இரண்டுமே குறைவாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.பிரதமர் மோடியின் ஜாதகத்தை ஆய்வு செய்த மல்ஹோத்ரா, தற்போதைய, சனிப் பெயர்ச்சி மற்றும் தசா புத்தி நிலைகள் மோடிக்கு சில தொந்தரவுகளை கொடுக்கக் கூடும், வாக்கு சதவீதம் மற்றும் பா.ஜ.க.வுக்கு இடங்கள் குறைய மோடி ஜாதகமும் ஒரு காரணமாக இருக்கக் கூடும். இந்த சவால்களுக்கு இடையே, ஜூன் 6-ம் தேதி ஒரு ஆச்சரியமான மற்றும் சற்றே சர்ச்சைக்குரிய அரசியல் நிகழ்வு நடைபெறும். அதன் பிறகு மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் வாய்ப்பைப் பெறுவார் என்று மல்ஹோத்ரா தெரிவித்துள்ளார்.

தேர்தலில் பாஜக வெற்றி பெற்றாலும் மோடி பதவி ஏற்க மாட்டார், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா முடி சூட்ட படுவார் என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்து வருகிறார். உத்தரப் பிரதேச மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாதை பிரதமராக்க வாய்ப்புகள் இருப்பதாக சில எதிர்க்கட்சிகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. மோடியின் வயது மூப்பு இதற்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது. இந்த நிலையில் ஜோதிடரின் இந்த கணிப்பு பல்வேறு யூகங்களை கிளப்பி இருக்கிறது.

Readmore: சென்னையில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு!… லேசர் ஒளி, பலூன்கள் பறக்கவும் தடை!… டிஜிபி அறிவிப்பு!

Tags :
Advertisement