பரபரப்பு...! தப்பி ஓட முயன்ற ரவுடி பாம் சரவணனை சுட்டு பிடித்த காவல்துறை...! மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ரவுடி பாம் சரவணனை கைது செய்து சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பியோட முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடிப்பு. துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் அடைந்து, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. அவரிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்த், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில செயலாளராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5ஆம் தேதி சென்னை பெரம்பூரில் உள்ள தனது புது வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு கொண்டிருந்த போது 8 பேர் கொண்ட கும்பலால் சுற்றி வளைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இது வரை 29 பேரை கைது செய்துள்ளனர். இவ்வாறு இருக்கும் நிலையில் காவலில் எடுக்கப்பட்ட ரவடி திருவேங்கடம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
தலைமறைவாக இருந்த ரவுடி பாம் சரவணனை கைது செய்து சென்னை அழைத்து வரும்போது காவலர்களை தாக்கிவிட்டு, நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்பியோட முயன்றபோது போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். துப்பாக்கியால் சுட்டதில் காலில் காயம் அடைந்து, சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதி. அவரிடம் இருந்து 4 நாட்டு வெடிகுண்டுகள், கத்த், கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்தனர்.