For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

வேலியே பயிரை மேயலாமா? பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்..

police sexually harassed a school student
07:44 PM Jan 18, 2025 IST | Saranya
வேலியே பயிரை மேயலாமா  பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காவலர்
Advertisement

16 வயது பள்ளி மாணவி ஒருவருக்கு காவலர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் ஒன்று பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

கரூர் மாவட்டம், நெரூர் அடுத்த அரங்கநாதன்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் 38 வயதான இளவரசன். இவர் வெங்கமேடு காவல் நிலையத்தில் காவலராக வேலை செய்து வருகிறார். இவர் 16 வயதான பள்ளி மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவி, செய்வது அறியாமல் திகைத்துள்ளார். இதையடுத்து, சிறுமி சம்பவம் குறித்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மாணவி அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், வெங்கமேடு காவல் நிலைய காவலர் இளவரசனை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர். தொடர்ந்து, தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, இளவரசன் ஏற்கனவே உதவி காவல் ஆய்வாளர் ஒருவரை தாக்கிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Read more: “ஒழுங்கா நான் சொன்னதை பண்ணு, இல்லேன்னா mark கம்மி பண்ணிடுவேன்” ஆசிரியருக்கு பயந்து மாணவி செய்த காரியம்..

Tags :
Advertisement