திருச்சி: நீதிமன்றம் அருகே கண்டெடுக்கப்பட்ட சடலம்.! தீவிர விசாரணையில் காவல்துறை.!
திருச்சி நீதிமன்றத்தின் அருகே அடையாளம் தெரியாத ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி நீதிமன்ற வளாகத்தின் பின்பகுதியில் உள்ள ஜல்லிக்கட்டு சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று முகம் சிதைந்து நிலையில் கிடந்தது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர் இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருச்சி செசன்ஸ் கோர்ட் காவல்துறையினர் உடலை ஆய்வு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் யார் என்பது குறித்து அடையாளம் காணவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இறந்த உடலில் முகம் சிதைந்து இருப்பதால் அவரை யாரேனும் கொலை செய்தார்களா.? அல்லது விபத்தில் மரணம் அடைந்தாரா.? என்ற கோணத்திலும் காவல்துறை விசாரித்து வருகிறது. கோர்ட் வளாகம் அருகே மர்மமான முறையில் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.