கால்பந்தாட்ட வீரரை துப்பாக்கியால் சுட்ட போலீஸ் அதிகாரி..!! அதிர்ச்சி வீடியோ உள்ளே..!!
பிரேசிலியன் லீக் இரண்டாவது டிவிசனின் 12-வது சுற்று ஆட்டத்தின் முடிவில் ஏற்பட்ட கைகலப்பின் போது, பிரேசில் கால்பந்து வீரர் ஒருவரின் காலில் போலீஸ் அதிகாரி துப்பாக்கியால் சுட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக செண்ட்ரோ ஓஸ்டி, கிரேமியோ அனாபோலிஸைத் (2-1) என தோற்றகடித்த நிலையில், ஆட்டத்தின் கடைசி விசிலை நடுவர் ஊதியதும் ரசிகர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர், கைகலப்பு மோசமடைந்ததால், போலீஸ் அதிகாரிகள் இதில் தலையிட்டனர். அவர்களில் ஒருவர் கிரேமியோ அனாபோலிஸ் கோல்கீப்பர் ரமோன் சோசா மீது ரப்பர் புல்லட்டால் சுட்டார்.
இதுதொடர்பான அந்த வீடியோவில், வீரர்கள் துப்பாக்கிச் சூடு குறித்து தங்கள் அவநம்பிக்கையையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்துவதைக் காணலாம். மேலும் சிலர், போலீசாரின் பதிலடிக்கு பயந்து சிதறி ஓடினார்கள். சௌசா மைதானத்தில் இருந்து ஸ்ட்ரெச்சரில் ரப்பர் குண்டுகளால் சுடப்பட்ட கால்பந்தாட்ட வீரர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அதே நேரத்தில் கிளப் இந்த சம்பவத்தை 'குற்றச் செயல்' என்று கூறியுள்ளது. இதற்கிடையே, கோயாஸ் மாநிலத்தின் ராணுவ போலீசார் வரும் நாட்களில் விசாரணையை உறுதிப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் கால்பந்து உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல நட்சத்திர வீரர்கள் காவல்துறையின் இந்த கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.