பாஸ்போர்ட் விசாரணைக்கு சென்ற பெண்ணை துப்பாக்கியால் சுட்ட சப் இன்ஸ்பெக்டர்.! அதிரவைக்கும் வீடியோ காட்சி.!
பாஸ்போர்ட் சோதனைக்காக காவல் நிலையம் சென்ற பெண்ணை சப்-இன்ஸ்பெக்டர் தலையில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவத்தில் காயமடைந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்திரபிரதேசம் மாநிலம் அலிகார் நகரை சேர்ந்த பெண் அங்குள்ள கோட்வால் காவல் நிலையத்தில் பாஸ்போர்ட் பரிசோதனைக்காக சென்று இருக்கிறார். அப்போது அங்கிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் சப்-இன்ஸ்பெக்டர் மனோஜ் சர்மாவிடம் பிஸ்தளை லோடு செய்வதற்காக கொடுத்துள்ளார். அப்போது துப்பாக்கியில் இருந்து சிதறிய புல்லட் ஒன்று அந்தப் பெண்ணின் தலையில் பாய்ந்தது.
இதனைத் தொடர்ந்து படுகாயம் அடைந்த அந்த பெண் ஜவஹர்லால் நேரு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது . மேலும் படுகாயம் அடைந்த அந்த பெண்ணை காவல்துறை உதவி அதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றுள்ளனர். மேலும் அவருக்கு தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளனர்.
இந்நிலையில் துப்பாக்கியால் சுட்ட காவல்துறை அதிகாரி தப்பி ஓடி விட்டார் . அவரை பிடிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவி காட்சியில் பதிவாகி இருக்கிறது. இது சமூக வலைதளங்களில் தற்போது வைரல் ஆகி வருகிறது.