For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பகீர்.! ISIS தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற ஐஐடி மாணவர்.! காவல்துறை அதிரடி நடவடிக்கை.!

05:09 PM Mar 24, 2024 IST | Mohisha
பகீர்   isis தீவிரவாத அமைப்பில் சேர முயன்ற ஐஐடி மாணவர்   காவல்துறை அதிரடி நடவடிக்கை
Advertisement

ஐ எஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பில் சேரப் போவதாக சமூக வலைதளங்களில் பதிவு செய்துவிட்டு ஐஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து காணாமல் போன நான்காம் ஆண்டு பயோ டெக்னாலஜி மாணவரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

Advertisement

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் இந்தியத் தலைவர் ஹரிஸ் ஃபாரூக்கி வங்கதேசத்திலிருந்து இந்தியாவிற்குள் ஊடுருவமும் என்ற நிலையில் துப்ரி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த மாணவனின் கைதும் நடைபெற்று இருக்கிறது.

டெல்லியைச் சேர்ந்த 4-ஆம் ஆண்டு பயோ டெக்னாலஜி படிக்கும் மாணவர் கல்லூரி வளாகத்தில் இருந்து திடீரென வெளியேறியதாக ஐஐடி-குவஹாத்தி பல்கலைக்கழகம் காவல்துறையிடம் புகார் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினர் தீவிரமான தேடுதல் வேட்டையில் இறங்கினர். இதனைத் தொடர்ந்து காணாமல் போன மாணவர் குவஹாத்தியிலிருந்து 30 கிமீ தொலைவில் உள்ள கம்ரூப் மாவட்டத்தில் ஹஜோ என்ற இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடம் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர் . இதுவரை கிடைத்துள்ள தகவல்களின்படி அந்த மாணவர் சர்வதேச அளவில் மிகப்பெரிய தீவிரவாத இயக்கமான ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தில் சேருவதற்கு லிங்க்டின் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது விருப்பத்தை பதிவு செய்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து தீவிரவாத இயக்கத்தில் சேரும் முடிவுடன் ஐஐடி பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து தப்பி சென்றதாகவும் தெரிய வந்திருக்கிறது.

ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர விரும்பி குவஹாத்தி ஐஐடி பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய மாணவர் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருக்கிறார். அவரிடம் சட்டபூர்வமான விசாரணை நடைபெறும் என காவல்துறை இயக்குநர் ஜெனரல் ஜிபி சிங் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த கைது சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த கூடுதல் காவல் கண்காணிப்பாளர் (STF) கல்யாண் குமார் பதக் குறித்த மின்னஞ்சலின் நம்பகத்தன்மை குறித்து விசாரித்ததாக தெரிவித்தார். அந்த விசாரணையின் முடிவில் மாணவர் தான் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு விருப்பம் தெரிவித்து மின்னஞ்சல் அனுப்பியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு அதிரடி காவல் படையினர் மாணவனை அவனது விடுதலைக்கு கூட்டிச் சென்று சோதனை நடத்தி இருக்கின்றனர். மாணவனின் அறையில் இருந்து ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியைப் போன்ற கருப்பு நிற கொடி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அந்த மாணவர் விடுதியில் யாருடனும் பேசாமல் தனிமையிலேயே பெரும்பாலான நேரத்தை செலவிட்டு வந்ததாகவும் சகமானவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பல தாக்குதல்களில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதியான ஹாரிஸ் ஃபாரூக்கி அவரது உதவியாளர்களுடன் அசாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பங்களாதேஷில் தங்கி இருந்து இந்தியாவில் சதி வேலைகளை செய்ய திட்டமிட்டு வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஹாரிஸ் ஃபாரூக்கியுடன் அவரது நண்பரான ரேகான் என்ற அனுராக் சிங் என்பவனும் கைது செய்யப்பட்டு இருக்கிறான். ஹாரிஸ் ஃபாரூக்கி தேசிய புலனாய்வு அதிகாரிகளால் தேடப்பட்டு வரும் பட்டியலில் உள்ள முக்கிய குற்றவாளி என்பதும் குறிப்பிடத்தக்கது.

Read More: தேனியில் உதயநிதி ஸ்டாலின் அளித்த வாக்குறுதி… நடுத்தர மக்கள் மகிழ்ச்சி! என்ன பேசினார் உதயநிதி?

Advertisement