For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு..! பதறும் தேமுதிக தொண்டர்கள்..!

06:03 PM Dec 02, 2023 IST | 1Newsnation_Admin
மியாட் மருத்துவமனையில் போலீஸ் குவிப்பு    பதறும் தேமுதிக தொண்டர்கள்
Advertisement

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக் குறைவு காரணமாக சில ஆண்டுகளாக கட்சி மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருந்து வருகிறார். இதன் காரணமாக கடந்த சட்டப்பேரவை தேர்தலிலும் அவர் போட்டியிடவில்லை. கடந்த ஆண்டு ஜூலை மாதம் அவருக்கு இருந்த நீரிழிவு பிரச்சனையால், வலது காலில் உள்ள விரல் பகுதியில் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, அந்த விரல் அகற்றப்பட்டது.

Advertisement

இந்நிலையில், கடந்த நவம்பர் 18ஆம் தேதி காய்ச்சல், சளி தொந்தரவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது வரை சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்ட மியாட் மருத்துவமனை, விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லை என்றும், அவருக்கு நுரையீரல் தொடர்பான சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நடிகர் சங்க தலைவர் நாசர், ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் விஜயகாந்தை நேரில் சென்று நலம் விசாரித்தனர். தற்போது அவர் பேச முடியாத நிலையில் இருப்பதால், குடும்பத்தினர் மற்றும் மருத்துவர்களிடம் உடல்நிலை குறித்து கேட்டறிந்துள்ளனர்.

இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் மியாட் மருத்துவமனையை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனை முன்பு தேமுதிக தொண்டர்கள் அதிக அளவில் வரக்கூடும் என்பதால் பாதுகாப்பு நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளதாக் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement