For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

தங்க சுரங்கத்தின் நுழைவாயிலை மூடிய போலீஸ்..!! உணவு, தண்ணீரின்றி 36 பேர் சடலமாக மீட்பு..!! பலி எண்ணிக்கை 100-ஐ தாண்டும் அபாயம்..?

The discovery of the bodies of 36 people who were trapped for weeks without food or water in an illegal mine in South Africa, where more than 100 people were feared to be trapped, has caused great tragedy.
07:31 AM Jan 15, 2025 IST | Chella
தங்க சுரங்கத்தின் நுழைவாயிலை மூடிய போலீஸ்     உணவு  தண்ணீரின்றி 36 பேர் சடலமாக மீட்பு     பலி எண்ணிக்கை 100 ஐ தாண்டும் அபாயம்
Advertisement

தென்னாப்பிரிக்காவில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கத்திற்குள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக அஞ்சப்படும் நிலையில் உணவு, நீரின்றி வாரக்கணக்கில் பதுங்கியிருந்த 36 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தென்னாப்பிரிக்காவில் பழைய தங்கச் சுரங்கப் பகுதிகளில் பல இடங்களில் சட்டவிரோதமாக தங்கம் தோண்டப்பட்டு வருகிறது. வடமேற்கில் ஸ்டில்பான்டைனில் உள்ள சுரங்கத்திற்குள் சுமார் 4,000 பேர் சட்டவிரோதமாக இப்படி செயல்பட்டு வருகின்றனர். இவர்களைத் தடுக்க அந்நாட்டு அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தாலும், இது பலனளிக்கவில்லை.

இந்நிலையில், சட்டவிரோத சுரங்கத் தொழிலாளர்கள் இருக்கும் சுரங்கத்தின் வாயிலை காவல்துறையினர் அடைத்துள்ளனர். இதனால், சுரங்கத்திற்குள் இருப்பவர்கள் உணவு, தண்ணீருக்காக வெளியில் வந்து தான் ஆக வேண்டும். அப்போது, அவர்களைக் கைது செய்து விடலாம் என சுரங்கத்தைச் சுற்றி போலீசார் நிறுத்தப்பட்டனர். ஆனால், சில தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள்ளேயே உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுரங்கத்திற்குள் 100-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பதாக அஞ்சப்படுகின்ற நிலையில், சுரங்கத்துக்குள் இருந்து இதுவரையில் 36 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. உணவும், தண்ணீரும் இல்லாமல் உயிர் பிழைக்க மேலே வந்தவர்களில் 82 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேலே அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக அஞ்சப்படுகிறது. சுரங்கத்திற்குள் சிக்கியிருப்பவர்களையும் உயிருடன் மீட்குமாறு அவர்களின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.

Read More : தீவிரவாதிகள் சரமாரி துப்பாக்கிச்சூடு!. 40 விவசாயிகள் சுட்டுக்கொலை!. நைஜீரியாவில் பயங்கரம்!.

Tags :
Advertisement