7-வது மர்டர்.! கூலி வேலை செய்யும் பெண்கள் குறி வைத்து தொடர் கொலை.! சைக்கோ கொலைகாரன் சிக்கியது எப்படி.?
கர்நாடக மாநிலத்தில் கூலித் தொழில் செய்யும் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் சைக்கோ கொலையாளி கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பான காவல்துறை விசாரணையில் தொடர் கொலைகளை பற்றிய அதிர்ச்சி அளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளியாகி இருக்கின்றது.
கர்நாடக மாநிலம் குல்பர்கா அருகே உள்ள மக்கள் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வபி. இவர் தனது குடும்பத்துடன் வேலைக்காக ஆந்திர மாநிலம் தண்டூர் பகுதியில் தங்கியிருக்கிறார். கூலி வேலை செய்வதற்காக சந்திமால் என்ற இடத்தில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த நடுத்தர வயது நபர் அந்த்தூர் என்ற கிராமத்தில் வேலை இருப்பதாக கூறி இவரை அழைத்துச் சென்றிருக்கிறார்.
தூரமான இடத்திற்கு வேலைக்கு செல்ல இருப்பதாக தனது கணவனிடம் செல்போனில் தெரிவித்திருக்கிறார் சர்வபி. வேலைக்கு சென்று சர்வபி வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த கணவர் இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். காவல்துறையினரும் பல இடங்களில் தேடியும் அவர் கிடைக்காததால் தந்தி மால் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது நடுத்தர வயது நபர் ஒருவர் சர்வபியை அழைத்துச் செல்வது பதிவாகி இருந்தது.
இது தொடர்பாக அந்த நபரை கைது செய்து விசாரித்ததில் பல அதிர்ச்சி அளிக்கும் உண்மை சம்பவங்கள் வெளிவந்திருக்கிறது. தீவிரமது புழக்கத்திற்கு அடிமையான அந்த நபர் கூலி வேலைக்கு செல்வதற்காக காத்திருக்கும் பெண்களை அழைத்துச் சென்று கொலை செய்து அவர்களது உடமைகளை திருடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார் என்பதை விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. அதைப்போல அவர் சர்வபியையும் கடத்தி கொலை செய்துள்ளார். இதற்கு முன்பு ஆறு கொலைகள் செய்ததும் இது அவரது ஏழாவது கொலை என்பதும் விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. மேலும் எந்த பெண்களையும் பாலியல் வன்புணர்வு செய்ததில்லை. இவரது நடவடிக்கைகள் ஒரு சைக்கோ கொலைகாரனை ஒத்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையின் விசாரணையில் அந்த நபரின் பெயர் கிஷ்டப்ப என்பதும் தெரியவந்துள்ளது.