For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

சேலம் | அதிமுக பிரமுகர் கொலையில் சிக்கிய திமுக கவுன்சிலர்!! - புதிய சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு!!

Police are looking for four persons, including a DMK woman councillor, in the murder of an AIADMK leader in Salem.
09:27 AM Jul 07, 2024 IST | Mari Thangam
சேலம்   அதிமுக பிரமுகர் கொலையில் சிக்கிய திமுக கவுன்சிலர்     புதிய சட்டத்தின் கீழ் கொலை வழக்கு பதிவு
Advertisement

சேலம், தாதகாபப்ட்டி காமராஜர் நகரை சேர்ந்த அதிமுக பிரமுகரும், மாநகராட்சி மண்டலக் குழு முன்னாள் தலைவருமான சண்முகத்தை கடந்த 3-ம் தேதி மாரியம்மன் கோயில் தெருவில் மர்ம கும்பல் வெட்டி கொலை செய்தது. இது சம்பந்தமாக அன்னதானப்பட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

Advertisement

இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சேலம் மாநகராட்சி 55-ஆவது வார்டு திமுக கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாரும், இரண்டாவது குற்றவாளியாக கவுன்சிலர் தனலட்சுமியும் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கில் தொடர்படைய 14 பேர் மீது அன்னதானப்பட்டி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் கூலிப்படையினரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை போலீசார் கைப்பற்றினர்.

போலீஸார் விசாரணையில் 55-வது வார்டு திமுக பெண் கவுன்சிலர் தனலட்சுமியின் கணவர் சதீஷ்குமாருக்கும், சண்முகத்துக்கும் இடையே மாரியம்மன் கோயில் டிரஸ்ட்டி தலைவர் பதவி பெறுவதிலும், சாலை ஒப்பந்த பணி எடுப்பது தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்தது.

இந்த வழக்கில் சதீஷ்குமார் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திமுக கவுன்சிலர் தனலட்சுமி உள்பட நான்கு பேர் தலைமறைவாக உள்ளதால்,போலீசார் தனிப்படை அமைத்து அவர்களை தேடி வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட சதீஷ்குமார் இன்று(ஜூலை 5) மருத்துவ பரிசோதனைக்காக சேலம் அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு பரிசோதனைக்கு பிறகு மீண்டும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய சட்டத்தின் கீழ் பதியப்பட்ட முதல் கொலை வழக்கு: மத்திய அரசு மூன்று புதிய சட்டத்தை கடந்த 1-ம் தேதி அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தின் கீழ் அதிமுக பிரமுகர் சண்முகம் கொலை வழக்கு ஐபிசி 302 சட்டப்பிரிவுக்கு மாற்றாக புதிய சட்டப்பிரிவான பிஎன்எஸ்-103 சட்டப்பிரிவின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இந்த சட்டத்தின்படி தண்டனைகள் மிகவும் கடுமையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தின் உட்பிரிவுகள் 103(2) மற்றம் 1,2ல் தண்டனை விவரம் கூறப்பட்டுள்ளது. அதன்படி, ஆயுள் தண்டனை வழங்கலாம். அதேபோல, ஐந்துக்கும் மேற்பட்ட கும்பல் கொலை செய்யும் போது, ஆயுள் தண்டனையும், தூக்கு தண்டனையும் வழங்க சட்ட சரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
Advertisement