For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

பொளந்து கட்டிய பொல்லார்ட்..!! 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்..!! வைரல் வீடியோ..!!

Needing 47 off the last 20 balls, Pollard eased the team's burden by hitting 5 sixes off Rashid Khan's 5 balls for 30 runs.
01:24 PM Aug 11, 2024 IST | Chella
பொளந்து கட்டிய பொல்லார்ட்     5 பந்துகளில் 5 சிக்ஸர்கள்     வைரல் வீடியோ
Advertisement

இங்கிலாந்தில் தி ஹண்ட்ரடு (100 பந்துகள்) கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஒரு அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் மொத்தம் 100 பந்துகள் கொடுக்கப்படும். பந்துவீச்சாளர் ஒரு ஓவருக்கு 5 பந்துகள் மட்டுமே வீசுவார். அந்த வகையில், 24-வது லீக் போட்டியில் சதர்ன் பிரேவ் மற்றும் டிரெண்ட் ராக்கெட்ஸ் அணிகள் நேற்று பலப்பரீட்சை நடத்தின.

Advertisement

முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் அணி மொத்தம் 100 பந்துகளில், 8 விக்கெட் இழப்புக்கு 126 ரன்கள் எடுத்தது. பின்னர், பிரேவ் சதர்ன் அணிக்காக விளையாடிய தொடக்க வீரர்களான அலெக்ஸ் டேவிட் 19 பந்தில் 28 ரன்களும், கேப்டன் ஜேம்ஸ் வின்ஸ் 26 பந்தில் 28 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தாலும், பிறகு களமிறங்கிய வீரர்கள் சொதப்பினர்.

இருப்பினும், பேட்டிங்கில் 6-வது இடத்தில் களமிறங்கிய கீரன் பொல்லார்டு, டிரெண்ட் ராக்கெட்ஸ் அணியின் ரஷித் கான் ஓவரில் தொடர்ந்து 5 சிக்ஸர்கள் அடித்து அமர்க்களப்படுத்தியதுடன், அணியை வெற்றிபெற செய்தார். கடைசி 20 பந்தில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ரசித் கான் வீசிய 5 பந்துகளில் 5 சிக்ஸர்கள் அடித்து 30 ரன்கள் எடுத்து அணியின் சுமையைக் குறைத்தார் பொல்லார்டு. இறுதியாக 99 பந்துகளில் 8 விக்கெட் இழப்புக்கு இலக்கை எட்டி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து, கிரன் பொல்லார்டு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

Read More : ’ஏய் கிட்ட வாடா’..!! வகுப்பறைக்குள் மாணவனை கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்கும் மாணவி..!! தீயாய் பரவும் வீடியோ..!!

Tags :
Advertisement