ஆளைக் கொல்லும் அரளியில் இதய நோய்க்கு மருந்து இருக்கா.? வாங்க அரளியின் நன்மைகளை தெரிஞ்சுக்கலாம்.!
வறண்ட நில தாவரமான அரளி, வீடுகளில் அழகிற்காக வளர்க்கப்படும் ஒரு செடியாகும். மேலும் இது நெடுஞ்சாலைகளில் கார்பன் டை ஆக்சைடு வாயுவை கட்டுப்படுத்துவதற்கும் மண்ணரிப்பை தடுப்பதற்காகவும் வளர்க்கப்படுகிறது. செடிகளில் அதிக விஷத்தன்மை கொண்டது அரளி. கிராமங்கள் முதல் நகரங்கள் வரை தற்கொலை செய்து கொள்ள முடிவெடுப்பவர்களின் முதல் ஆயுதமாக இருப்பது அரளி விதை. இந்தச் செடியை அரைத்து குடித்தால் மரணம் நிச்சயம். இத்தனை விஷத்தன்மை கொண்ட அரளிச்செடியில் மருத்துவ பயன்களும் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா.? ஆனால் அதுதான் உண்மை. அரளிச்செடியில் இருக்கும் மருத்துவர நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் விரிவாக காணலாம்.
அரளிச் செடியில் நீரியாசைடு, நீரியோடெரின், புளூமெரிசின் மற்றும் கராபின் போன்ற வேதிப்பொருட்கள் நிறைந்திருக்கிறது. அரளிப் பூவை வெளிபூச்சு மருந்தாக பயன்படுத்தலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அரளிச்செடியின் மலரை அரைத்து அதனை சல்பருடன் கலந்து தொழுநோய் புண்களுக்கு தடவினால் நல்ல குணம் கிடைக்கும். மேலும் பால்வினை தொற்றுக்களுக்கும் இவற்றை மருந்தாக பயன்படுத்தலாம். அரளிப் பூவை அரைத்து பால்வினை உங்களில் தடவினால் அந்தத் தொற்றுக்கள் நீங்கும்.
இவற்றில் இருக்கும் நீரியோடெரின் என்னும் வேதிப்பொருளிலிருந்து இதய நோய்க்கான மருந்துகள் தயாரிக்கப்படுகிறது. மேலும் இவை கேன்சர் மருந்துகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. தலை எரிச்சல் மற்றும் பித்த கோளாறு போன்றவற்றிற்கும் அரளி பூவை மருந்தாக பயன்படுத்தலாம். நாள்பட்ட புண் மற்றும் ரத்தக் கட்டிகளுக்கும் அரளிப்பூ சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இந்திய ஆயுர்வேத மருத்துவத்தில் அரளிப் பூவில் இருந்து தயாரிக்கப்படும் காரவீரதிய தைலம் தோல் நோய்களை குணப்படுத்துகிறது. இதுபோன்ற பல மருத்துவ குணங்கள் அரளி பூவில் நிறைந்திருக்கிறது. இவற்றில் இருந்து தயாரிக்கப்படும் மருந்துகள் முறையான மருத்துவர்களைக் கொண்டு கவனத்துடன் தயாரிக்கப்பட வேண்டும். சற்று மாறினாலும் மரணம் நிச்சயம் என வைத்தியர்கள் எச்சரிக்கின்றனர்.