விஷமாக மாறிய வெள்ளரிக்காய்!. 5 வயது குழந்தை பலி!. மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி!
Cucumber: மத்தியப் பிரதேசத்தில் இரவு உணவின்போது வெள்ளரிக்காய் சாப்பிட்டதாகக் கூறப்படும் 5 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லம் பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், செவ்வாய்கிழமை இரவு உணவின்போது சாலட்டாக வெள்ளரிக்காயை சாப்பிட்டுள்ளனர். இதையடுத்து, மறுநாளை புதன்கிழமை காலையில் 5வயது சிறுவன் உட்பட அனைவரும் வாந்தி, வயிற்று வலி உள்ளிட்ட உபாதைகள் ஏற்பட்டுள்ளது. வலியைக் குறைக்க அவர்கள் அடிப்படை மருந்து ஒன்றை எடுத்துக்கொண்டதாகவும் அது பலனளிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதையடுத்து, ரத்லமில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி 5வயது குழந்தை உயிரிழந்தார். மேலும், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்றும் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர். குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகள் ஐசியுவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளனர்,
ரத்லம் மருத்துவக் கல்லூரியின் தொற்றுநோயியல் நிபுணர் டைனிக் பாஸ்கர் கூறியதாவது, அனைத்து நோயாளிகளும் உணவு நச்சு அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டதாகவும், சரியான சிகிச்சையைப் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர்களின் நிலை மோசமடைந்ததாகவும் கூறினார். இருப்பினும், பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட தகவலின் அடிப்படையில், குழந்தையின் மரணம் புட் பாய்சன் ஆனதால் நிகழ்ந்ததாக தெரிகிறது. மேலும் வெள்ளரிக்காயை சாப்பிட்டதால் அதே பகுதியை சேர்ந்த மற்ற 2 குடும்பத்தினரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Readmore: நவராத்திரி 3ம் நாள்!. வராகி அம்மனை வழிபடுங்கள்!. பகை, கடன் தொல்லை தீரும்!