பொன்முடி வழக்கு: ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு..! சட்டம் தெரியுமா..? தெரியாத..? உச்சநீதிமன்றம் அதிரடி..!
முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு, சொத்து குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.50 லட்சம் அபராதம் விதித்தது உயர்நீதிமன்றம். இதனைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை இழந்தார் பொன்முடி. மேலும் பொன்முடி வெற்றி பெற்ற திருக்கோவிலூர் தொகுதி காலியானதாகவும் அறிவிக்கப்பட்டது.
உயர்நீதிமன்றம் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி ஆகியோர் குற்றவாளி என சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தண்டனையை நிறுத்தி வைத்தது. இந்த தீர்ப்பை அடுத்து மீண்டும் திருக்கோவிலூர் தொகுதி எம்.எல்.ஏ.வாக பொன்முடி அறிவிக்கப்பட்டார்.
மேலும் அமைச்சரவையில் மீண்டும் சேர்க்கக் கோரி ஆளுநருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார்.
ஆனால், உச்சநீதிமன்றம் இடைக்கால நிவாரணம் மட்டுமே வழங்கி இருப்பதாகவும், அவர் குற்றமற்றவர் என்று குறிப்படவில்லை எனக்கூறி பொன்முடிக்கு அமைச்சர் பதவி பிரமாணம் செய்து வைக்க ஆளுநர் மறுப்பு தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்க்கின் விசாரணை தலைமை நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு முன்பு இன்று வந்தது.
இந்நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்ட்டது. உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும், நீதிமன்ற உத்தரவை மீறி பதவிப் பிரமாணம் செய்ய முடியாது என எப்படி கூற முடியும்? ஆளுநர் ரவிக்கு சட்டம் தெரியுமா? தெரியாதா? தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா? அரசியல் சாசனத்தை பின்பற்றாவிடில் மாநில அரசு என்ன செய்யும் என்று நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார்.
மேலும் பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு விதிக்கிறோம். நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை. அரசியல் சாசன நடைமுறையை பின்பற்ற ஒரு அவகாசம் வழங்குகிறோம் என்று நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் ஆளுநர் தரப்பில் விளக்கம் கேட்டு ஒன்றிய அரசு பதிலளிக்கவும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.