முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

நிமோனியா காய்ச்சல்.. காங்கிரஸ் எம்எல்ஏ EVKS இளங்கோவன் மருத்துவமனையில் அனுமதி...!

Pneumonia fever.. Congress MLA EVKS Elangovan admitted to hospital
06:42 AM Nov 28, 2024 IST | Vignesh
Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் தலைவரும் எம்எல்ஏவுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிமோனியா காய்ச்சல் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Advertisement

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த தனது மகன் திருமகன் ஈவேரா காலமானதை தொடர்ந்து, இடைத்தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ ஆக உள்ளார். காய்ச்சல் பாதிப்புக்காக கடந்த 11 ஆம் தேதி மணப்பாக்கம், மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு நுரையீரல் சார்ந்த பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு, அதற்காக சிகிச்சையளிக்கப்பட்டது.

தற்பொழுது நிமோனியா காய்ச்சல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திடீரென அவரது உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாகவும், அதனால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (நவம்பர் 28) இளங்கோவனின் உடல்நலம் குறித்து விசாரிக்க மருத்துவமனைக்குச் செல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
CONGRESSEVKSevks elangovanmk stalinPneumonia fever
Advertisement
Next Article