For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

மாறும் அரசியல் கள நிலவரம்.! அதிமுகவுடன் கைகோர்க்கும் பாமக.? பரபரப்பான தகவல்.!

01:48 PM Feb 20, 2024 IST | 1newsnationuser7
மாறும் அரசியல் கள நிலவரம்   அதிமுகவுடன் கைகோர்க்கும் பாமக   பரபரப்பான தகவல்
Advertisement

2024 ஆம் வருடத்திற்கான பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் அடுத்த மாத துவக்கத்தில் அறிவிக்கப்பட இருக்கிறது. மேலும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின்படி பாராளுமன்றத்திற்கான பொதுத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 16 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து தேர்தல் பணிகளுக்காக அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது .

Advertisement

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் தலைமையில் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் கட்சிகள் தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. மேலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விரும்பும் நிர்வாகிகள் விருப்பம் மனு தாக்கல் செய்யலாம் எனவும் அந்த கட்சியின் தேர்தல் பணிக்குழு அறிவித்துள்ளது. தமிழகத்தின் எதிர்க்கட்சியான அதிமுக பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியை முடித்துக் கொண்ட பிறகு தங்களது தலைமையில் பாராளுமன்ற தேர்தலுக்கு வலுவான கூட்டணியை அமைக்க முயற்சி செய்து வருகிறது.

பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். பாஜகவின் மூத்த தலைவரான அமித்ஷா கூட்டணிக் கதவு திறந்திருக்கிறது என்று வெளிப்படையாக தெரிவித்த போதும் அதைக் கண்டு கொள்ளாமல் தங்களது தலைமையில் பாராளுமன்ற தேர்தலுக்கு கூட்டணி அமைக்கும் பணியில் அதிமுக ஈடுபட்டு வருகிறது. மறுபுறம் பாரதிய ஜனதா கட்சி மூன்றாவது அணியாக தங்களது தலைமையில் தமிழகத்தில் கூட்டாளி அமைத்து பொது தேர்தலை சந்திக்க இருக்கிறது. வடமாநிலங்களில் பாரதிய ஜனதா கட்சிக்கு வலிமையான கூட்டணி அமைந்திருந்தாலும் தமிழகத்தில் அந்த கட்சியின் நிலை பரிதாபமாகவே இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணியில் இருந்த பாட்டாளி மக்கள் கட்சி அதிமுக ஒரு கூட்டணி வைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தேர்தலுக்கான கூட்டணி குறித்து அதிமுக மற்றும் பாமக கட்சிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியாகி இருக்கிறது . அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸை சந்தித்து பேசி இருந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ஜி.கே மணி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி இருக்கிறார்

பாரதிய ஜனதா கட்சியுடன் பாமக கூட்டணி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அதிமுக மற்றும் பாமக கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கி இருக்கிறது. விரைவில் இந்தக் கூட்டணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்களில் செய்திகள் பரவி வருகிறது. பாமக அதிமுகவுடன் இணையும் பட்சத்தில் வட தமிழகத்தில் அதிமுகவின் கை ஓங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

English Summary: ADMK and PMK may team up for the upcoming parliamentary elections 2024.There are talks going between both parties. Soon There will be an official announcement.

Tags :
Advertisement