பொங்கல் நெருங்கியாச்சு பரிசு தொகுப்பு என்னாச்சு.? தமிழக அரசுக்கு டாக்டர் ராமதாஸ் கேள்வி.?
நாளை புது வருடம் பிறக்க இருக்கின்ற நிலையில் பொங்கல் பண்டிகைக்காண பரிசுத்தொகுப்புகளின் விபரம் என்னானது என கேள்வி எழுப்பி இருக்கிறார் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ். மேலும் பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிக்கை வெளியிட்ட அவர் விவசாயிகளிடமிருந்து அரசு நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டிருக்கிறார்.
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை ஜனவரி 14-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. பொங்கல் கொண்டாட்டங்களை முன்னிட்டு பொதுமக்களுக்கு அரசு சார்பாக ரொக்கப் பணம் மற்றும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டிற்கான பண உதவித் தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த எந்த விபரங்களும் வெளியிடப்படவில்லை. இது தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் மக்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வரும் நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பை அரசு விரைவாக வெளியிட வேண்டும். மேலும் கரும்பு விவசாயிகளும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அவர்களிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் கேட்டிருக்கிறார். கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் அரசு அவர்களிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்வது மிகப்பெரிய உதவியாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.