ELECTION | பாஜக-விற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய முடியாது"… பாமக மாவட்ட செயலாளர் பகிரங்க அறிவிப்பு.!
ELECTION: 2024 ஆம் வருட பொது தேர்தல் வாக்குப்பதிவு வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி உட்பட 21 மாநிலங்களில் உள்ள 102 பாராளுமன்ற தொகுதிகளில் நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் அரசியல் கட்சிகள் தீவிரமான வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றன.
தமிழகத்தில் கடந்த காலங்களில் பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை(ELECTION) எதிர்கொண்டது. சில மாதங்களுக்கு முன் இந்தக் கூட்டணி பிரிந்ததை தொடர்ந்து பாஜக தனது தலைமையில் கூட்டணி உருவாக்கி பொது தேர்தலை எதிர்கொள்கிறது. பாஜக கூட்டணியில் பாமக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போன்ற கட்சிகளும் இணைந்து போட்டியிடுகிறது.
தமிழகத்தில் முக்கிய கட்சிகளில் ஒன்றான பாமக இந்த வருட நாடாளுமன்ற தேர்தலில் 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜக 19 தொகுதிகளில் போட்டியிடுகிறது. பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய மாட்டேன் என பாமகவின் மாவட்ட செயலாளர் கோவை ராஜு அறிவித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
பாஜக கூட்டணி கட்சியாக இருந்தாலும் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் அவர்கள் பாமகவை மதிக்கவில்லை என கோவை ராஜ் குற்றம் சாட்டியிருக்கிறார். மேலும் கூட்டணி தர்மத்தை விட சுயமரியாதையே முக்கியம் என தெரிவித்த அவர் கோவை தேர்தல் பிரச்சாரப் பணிகளில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார். இதனால் பாமக மற்றும் பாஜக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.