பிரதமர் மோடி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு.. டெல்லி திரும்புவதில் தாமதம்..!!
பிரதமர் மோடி சென்ற விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால், அவர் டெல்லி திரும்புவதில் தாமதம் ஏற்பட்டது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்றுவிட்டு டெல்லி திரும்பும்போது அவரது விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், டியோகர் விமான நிலையத்தில் அவரது விமானம் நிறுத்தப்பட்டுள்ளது. டெல்லிக்கு திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
முன்னதாக, பீஹார் மாநிலம் ஜமுய் நகரில் நடந்த அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பல கோடி மதிப்புள்ள அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். ஜமுய் நகரில் நடைபெற்ற ஜன்ஜாதியா கவுரவ் திவாஸில் கலந்து கொண்டு, பகவான் பிர்சா முண்டாவுக்கு அஞ்சலி செலுத்தி, பழங்குடியினர் நலனில் பாஜக தலைமையிலான அரசு கவனம் செலுத்துவதை வலியுறுத்தினார். பிறகு ஜார்க்கண்ட் மாநிலம், தியோகர் நகரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.
கூட்டம் முடிந்த பிறகு, பிரதமர் டில்லி கிளம்ப இருந்த நேரத்தில் அவர் பயணம் செய்ய இருந்த விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விமானம் புறப்பாடு ரத்து செய்யப்பட்டது. பிரதமர் டில்லி கிளம்புவது தாமதம் ஆகி உள்ளது.
Read more ; இந்த விஷயம் தெரிஞ்சா போதும்.. நீங்களும் கோடீஸ்வரன் தான்..!! 8-4-3 ஃபார்முலா கேள்விபட்டிருக்கீங்களா?