முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

'ராம் ஆயேங்கே ..' கண்களில் கண்ணீர்.. மனமெங்கும் உணர்வுகள்.! திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி பகிர்ந்த ஸ்ரீராமரின் பஜனை.!

02:36 PM Jan 06, 2024 IST | 1newsnationuser7
Advertisement

ராம் மந்திர திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக நிகழ்விற்காக அயோத்தி நகரம் கோலாகலமாக தயாராகி வருகிறது. உத்திர பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராம ஜென்ம பூமி அறக்கட்டளையின் சார்பாக ஆயிரம் கோடி ரூபாய் செலவில் ராமர் கோவில் கட்டப்பட்டு வருகிறது. இதன் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேக விழா வருகின்ற 22ஆம் தேதி பிரதமர் மோடியின் தலைமையில் நடைபெற இருக்கிறது.

Advertisement

இந்த விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்வில் 10,000 முதல் 15,000 பார்வையாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டிருக்கிறது. இந்நிலையில் ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகத்திற்காக ராமர் வருகிறார் என்ற பாடலை வளர்ந்து வரும் பாடகரான ஸ்வேதா மெகுல் வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்தப் பாடலை ஸ்ரீராமருக்கு அர்ப்பணிப்பு செய்வதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பாடல் வெளியான ஒரு மணி நேரத்தில் மூன்று லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்திருக்கிறது. மேலும் இந்தப் பாடல் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்தப் பாடலால் மிகவும் ஈர்க்கப்பட்ட பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் இந்தப் பாடல் குறித்து வெகுவாக பாராட்டு தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கும் அவர் கேட்போரின் மனதை உருக்கி கண்களில் கண்ணீர் வர வைக்கும் இந்தப் பாடல் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பதிவு செய்திருக்கும் பிரதமர் " ஸ்ரீராமரின் இந்த பஜனை கேட்கும்போது நம் காதுகள் வழியாக மனதிற்குள் புகுந்து உணர்வுகளை தட்டி எழுப்பி கண்களில் கண்ணீர் வர வைக்கும் அளவிற்கு மனதை வருடுவதாக இந்தப் பாடல் அமைந்திருக்கிறது . ஸ்ரீராமரின் கோவில் திறக்கப்பட இருக்கும் இந்த நேரத்தில் மக்களின் உத்வேகத்தையும் பக்தியையும் தூண்டும் வகையில் இந்த பாடல் அமைந்திருக்கிறது" என பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.

Tags :
PM ModiRam AyengeRam MandhirShri Ram BhajanSwasti Mehul
Advertisement
Next Article