"அடடே, கண்கொள்ளா காட்சி.." அழகிய பவளப்பாறைகளுடன் பிரதமர் மோடியின் சாகச பயணம்.! ட்ரெண்டிங் புகைப்படங்கள்.!
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் தனது ஓய்வு நேரத்தை செலவிடுவதற்காக இந்திய யூனியன் பிரதேசமான லட்சத்தீவிற்கு சென்றிருந்தார். அங்கு தான் கண்ட புதுமையான அனுபவங்களை தனது X வலைதளத்தின் மூலமாக நாட்டு மக்களுக்கும் பகிர்ந்திருக்கிறார். பிரதமர் கடலுக்கு அடியில் பவளப்பாறைகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி சாகச செயல்களில் ஆர்வம் உடையவர் என்பது நாம் அறிந்ததே. இதற்கு முன்பு 2019 ஆம் ஆண்டு பியர் கிரில்ஸ் என்ற வன ஆர்வலருடன் உத்ரா கண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள வன உயிரியல் பூங்காவிற்கு சாகச சுற்றுப்பயணம் சென்றார். தற்போது ஓய்விற்காக லட்சத்தீவு சென்ற அவர் சாகச பயணமாக கடலுக்குள் மூழ்கி பவளப்பாறைகளை கண்டிருக்கிறார். மேலும் அவற்றுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட பிரதமர் மோடி அவற்றை சமூக வலைதளங்களில் பதிவு செய்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கும் அவர் "லட்சத்தீவின் அழகு மெய் மறக்க செய்கிறது. கடலுக்கு அடியில் இருக்கும் பவளப்பாறைகள் பார்ப்பதற்கு பிரமிப்பாகவும் மனதை புத்துணர்ச்சி கொள்ள செய்வதுமாக இருக்கிறது. நீங்கள் ஒரு சாகச புரிவதாக இருந்தால் கண்டிப்பாக லட்சத்தீவிற்கு வந்து இந்த அழகை ரசிக்க வேண்டும். இந்த சுற்றுப்பயணம் 140 கோடி மக்களுக்கும் சேவையாற்ற தேவையான உத்வேகத்தை எனக்கு அளித்திருக்கிறது என குறிப்பிட்டு இருக்கிறார். பிரதமரின் இந்த பதிவு தற்போது ட்ரெண்டிங் ஆகி வருகிறது.