For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

PMO MODI | 'ராம் நவமி அன்று ஸ்ரீ ராமரின் முதல் சூரிய திலக வழிபாடு'… உணர்ச்சிப்பூர்வமான படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி.!!

02:42 PM Apr 17, 2024 IST | Mohisha
pmo modi    ராம் நவமி அன்று ஸ்ரீ ராமரின் முதல் சூரிய திலக வழிபாடு … உணர்ச்சிப்பூர்வமான படங்களை பகிர்ந்த பிரதமர் மோடி
Advertisement

PMO MODI: இந்தியா முழுவதும் இன்று ராம் நவமி கொண்டாடப்படுகிறது. அசாம் மாநிலம் நல்பாரியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது ஸ்ரீராமருக்கு மரியாதை செலுத்துவதற்காக சில நேரம் தனது பேச்சை நிறுத்தினார். பின்னர் பாலராமருக்கு சூரிய பகவான் திலகமிட்ட வீடியோவை பார்த்து உணர்ச்சிவசப்பட்டதாக மக்களிடம் பகிர்ந்து கொண்டார்.

Advertisement

விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ ராமரின் பிறந்த நாள் ஒவ்வொரு வருடமும் சரித்திரம் மாதத்தின் ஒன்பதாவது நாளில் கொண்டாடப்படும். இந்த கொண்டாட்டம் ராமநவமி என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் ராமநவமி ஏப்ரல் 17ஆம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. ராமநவமையை முன்னிட்டு ஸ்ரீ ராமருக்கு புதிதாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலில் சிறப்பு பூஜை சூரிய அபிஷேகம் அல்லது சூரிய திலகம் இடும் நிகழ்வு நடைபெற்றது.

இதற்காக ரூர்கி ஐஐடி விஞ்ஞானிகள் வடிவமைத்த பிரத்தியேக கருவி பலராமரின் நெற்றியில் சூரிய கதிர்களை பிரகாசிக்க செய்தது. இந்தக் கதிர்கள் 4 நிமிடங்களுக்கு 75 மில்லி மீட்டர் வட்ட வடிவில் திலகம் போல பிரகாசமாக விழுந்தது. இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜைகளும் தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இந்தக் காட்சியை கோவிலில் கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பக்தி பிரவேசம் அடைந்தனர்.

நல்பாரியில் நடைபெற்ற பேரணிக்கு பிறகு ராம் லல்லாவின் சூரிய திலகத்தை பார்த்தேன். இந்தியாவில் இருக்கும் கோடிக்கணக்கான ராம பக்தர்களை போலவே எனக்கும் இது உணர்ச்சிபூர்வமாக இருந்தது. அயோத்தியில் பிரம்மாண்டமான ராம நவமி வரலாற்று சிறப்பு மிக்கது. இந்த சூர்ய திலக் நம் வாழ்வில் ஆற்றலைக் கொண்டு வரட்டும், மேலும் இது நமது தேசத்தை பெருமையின் புதிய உயரங்களை எட்டுவதற்கு ஊக்கமளிக்கட்டும்" என்று அவர் ஒரு எக்ஸ் பதிவில் கூறியுள்ளார்.

ராம் லல்லா வின் சூரிய திலக வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு அசாம் மாநிலத்தின் நல்பாரி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி(PMO MODI) தன்னுடன் சேர்ந்து ஸ்ரீராமருக்கு வழிபாடு செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தார். மேலும் ராமருக்கு மரியாதை செலுத்தும் விதமாக செல்போன்களின் டார்ச் விளக்குகளை ஆன் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். பகல் நேரமாக இருந்தாலும் நம் செல்போன்களில் விளக்கை ஆன் செய்வதன் மூலம் நாமும் ஸ்ரீ ராமரின் சூரிய திலக நிகழ்வில் பங்கேற்கலாம் எனக் கூறினார். மேலும் கூடியிருந்த மக்களை தன்னுடன் சேர்ந்து ஜெய் ஸ்ரீ ராம் கோசமிடுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.

Read More: நான்காவது நாளாக வெள்ளத்தில் மிதக்கும் பாகிஸ்தான்! – 63 பேர் பலி, பலர் மாயம்!

Advertisement